Trump to Ease Tariffs: அப்பாடா.. அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் நிம்மதி.. ட்ரம்ப் கொடுத்த சலுகை என்ன தெரியுமா.?

7 months ago 7
ARTICLE AD

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகளால், வெளி நாட்டினர் மட்டுமல்லாது, உள் நாட்டினரே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால், டரம்ப்பின் நண்பரான மஸ்க்கின் டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்க வாகன தயாரிப்பாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர் அறிவிக்க இருக்கும் நிவாரணத்தால், அவர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

ட்ரம்ப்பின் வரியால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வரிகளின் பாதிப்பு உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக, சீனா உடனான வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில், அதனாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரி 100 சதவீதத்திற்கும் மேல் சென்றுவிட்டதால், அமெரிக்க உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

குறிப்பாக, வாகன உற்பத்தியாளர்கள், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், பெருமளவில் சீனாவில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு வருகிறது. அதனால் தான், சீனாவை நம்பியிருக்காமல், இந்தியாவிற்கு ஐஃபோன் உற்பத்தியை மாற்றுமாறு, ஆப்பிள் நிறுவனத்திற்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல், வாகன உற்பத்தியாளர்கள், பல நாடுகளிலிருந்து தங்கள் வகனங்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதால், அவர்களின் வாகன உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். குறிப்பாக, ட்ரம்ப்பின் நண்பரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் கனிசமான சரிவை சந்தித்து வருகிறது.

வாகன உற்பத்தியாளர்களுக்கு வரிகளை தளர்த்த ட்ரம்ப் முடிவு

இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உற்பத்தியாளர்கள் மீதான கட்டணங்களின் தாக்கத்தை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, கார் இறக்குமதிக்கு ஏற்கனவே 25 சதவீத வரி செலுத்தும் நிறுவனங்கள், இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு தனியாக வரி செலுத்த வேண்டியதில்லை.

மேலும், வாகன உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் உதிரி பாகங்களுக்கான வரியை, அரசு நிர்வாகத்திடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறைகள் மே மாதம் 3-ம் தேதி முதல் அமலாகும் என தெரிகிறது.

ட்ரம்ப் அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை ஒட்டி, டெட்ராய்ட்டில் இன்று இரவு ட்ரம்ப் பங்குபெறும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல உள்ளதால், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிபர் ட்ரம்ப்பின் இந்த முடிவை, வாகன உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் நம்பியுள்ள வாகன உற்பத்தித் தொழிலுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துவரும் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read Entire Article