TRB Annual Planner 2025: அரசு துறைகளில் 7535 பணியிடங்கள்; என்னென்ன தேர்வு? எப்போது? டிஆர்பி அசத்தல் அறிவிப்பு

8 months ago 5
ARTICLE AD

2025ஆம் ஆண்டில் 7,535 இடங்களை நிரப்புவதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

என்னென்ன தேர்வு? என்ன பணியிடங்கள்?

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணை பேராசிரியர், உதவி நூலகர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 232 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சட்ட உதவி பேராசிரியர், சட்ட இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வின் மூலம் 132 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

4000 பணி இடங்களுக்கான தேர்வு

மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 4000 பணி இடங்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதேபோல, சிஎம்ஆர்எஃப் (CMRF) எனப்படும் முதலமைச்சருக்கான ஆய்வு உதவித்தொகைக்கான தேர்வு குறித்த அறிவிக்கை, ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் 180 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

முதுகலை உதவியாளர் இடங்கள்

தொடர்ந்து 1915 முதுகலை உதவியாளர் (Post Graduate Assistants) இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் நிலையில், நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

பி.டி. அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் பிஆர்டிஇ ஆசிரியர்களுக்கான 1205 பணி இடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. அதேபோல வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணியிடங்கள் 51 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆண்டின் ஆரம்பத்திலேயே, அந்த ஆண்டில் நிரப்பப்படும் பணி இடங்கள், நடத்தப்படும் தேர்வுகள் ஆகியவற்றின் அட்டவணை வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?

எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இந்த அட்டவணையில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது. 3 மாதங்கள் முடிய இருந்த நிலையில், அதுகுறித்து தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Read Entire Article