பொன்னேரி - கவரைப்பேட்டைஇடையே -இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இருப்பதால் மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணி

சென்னை சென்டிரல் -கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப் பேட்டை ரெயில் நிலையம் இடையே வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து:

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 1, மாலை 3.45 ஆகிய நேரங்களில் சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் |இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங் களில் புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்க மாக, சூலூர்பேட்டையில் இருந்து இதேதேதிகளில் காலை 12.35 மதியம் 1.15 மாலை3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.40, 2.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது

பகுதி நேர ரத்து

செங்கல்பட்டில் இருந்து 27 ருேம் 27 மற்றும் 29 ஆகிய5 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப் பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர நேர ரத்து செய்யப் பட்டு, சென்னை கடற்கரை யில் நிறுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் அதில் கூறப்பட்டுள்ளது.