Toyoto Affordable Cars: Glanza முதல் Rumion வரை.. ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் டொயோட்டாவின் சூப்பர் கார்கள்!

1 month ago 3
ARTICLE AD

Toyoto Affordable Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா, டாடா, ஹுண்டாய், மாருதி சுசுகி ஆகிய கார்கள் இருந்தாலும் டாெயோட்டாவிற்கு என்று தனி வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது.

இந்தியாவில் ரூபாய் 15 லட்சத்திற்கும் குறைவாக உள்ள டொயோட்டா கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. Toyota Glanza:

டொயோட்டாவின் சிறந்த ஹேட்ச்பேக் காராக இந்த Toyota Glanza உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.02 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.33 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 22.3 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 2 ஏர்பேக், ஏபிஎஸ் முறை, ஆட்டோமெட்டிக் டோர் லாக் போன்ற வசதிகள் கொண்டது.

2. Toyota Urban Cruiser Taisor

டொயோட்டோ நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Toyota Urban Cruiser Taisor கார் ஆகும்.  இதன் தொடக்க விலை ரூபாய் 8.93 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூபாய் 15.32 லட்சம் ஆகும். இந்த கார் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 12 வேரியண்ட்களை கொண்டது. 360 டிகிரி கேமரா உள்ளது. 6 ஏர்பேக் வசதி கொண்டது.

3. Toyota Rumion:

இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய கார் இந்த Toyota Rumion. 6 கியர்களை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 13.44 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் விலை ரூபாய் 17.34 லட்சம் ஆகும். 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. 20.51 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 7 வேரியண்ட்கள் உள்ளது.

4. Toyota Urban Cruiser Hyryder:

டொயோட்டா நிறுவனத்தின் மற்றொரு படைப்பு Toyota Urban Cruiser Hyryder ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.66 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 25.03 லட்சம் ஆகும். 1462 மற்றும் 1490 சிசி திறன் கொண்ட எஞ்ஜின்களை கொண்டது. 21.11 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 25 வேரியண்ட்களை கொண்டது. 6 ஏர்பேக்கை கொண்டது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த கார்கள் இந்திய சாலைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டாடா, மாருதி சுசுகி, ஹுண்டாய் போன்ற கார்களைப் போல டொயோட்டா நிறுவனமும் தனது கார்களுக்கு மாதாந்திர தள்ளுபடி அளித்து வருகிறது.

Read Entire Article