Toyota Urban Cruiser EV: புதுசா அர்பன் க்ரூசரை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - ரக்கட் லுக், லாங்க் லைஃப் - ரேஞ்ச் என்ன?

7 months ago 5
ARTICLE AD

Toyota Urban Cruiser EV: டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூசர் மின்சார கார் மாடல் விலை, ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூசர்:

டொயோட்டா நிறுவனத்தின் கார்களானது கவனத்தை ஈர்க்கக் கூடிய தோற்றம், நீடித்து உழைக்கக்கூடிய திறன் மற்றும் அட்டகாசமான அம்சங்கள் காரணமாக மிகவும் பிரபலமானது. நடப்பாண்டில் ஒரு சொகுசு காரை வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், டொயோட்டாவின் புதிய அர்பன் க்ரூசர் கார் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலில் முற்றிலும் டிஜிட்டல் மற்றும் தீவிரமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. இந்த முழு மின்சார காரானது நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

அர்பன் க்ரூசர் EV - வடிவமைப்பு & அம்சங்கள்:

5 சீட்டர் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவியாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் கிரேட்டா மற்றும் மாருதி சுசூகியின் eVX மாடலின் ரீபேட்ஜ் வெர்ஷனாக இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது.  ஸ்போர்ட்ஸ் லுக் கொண்டு மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபட்டு காட்சியளிக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டாளர்கள் மற்றும் சாகச பயணங்களை விரும்புவோர்களுக்கான தேர்வாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,285 மிமீ நீளமும் 2,700 மிமீ வீல்பேஸும் கொண்டு, அதிக உட்புற இடத்தை கொண்டுள்ளது.

ஹெட்லைட்களை இணைக்கும் குரோம் ஸ்ட்ரிப், 12-பீஸ் LED DRLகள், அலாய் வீல்கள், கருப்பு நிற டோர் கார்னீஷ், கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், பின்புறத்தில் ஒரு பருமனான பம்பர் உள்ளிட்ட பல வசதிகளும் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்பன் க்ரூசர் EV - பேட்டரி விவரங்கள்:

டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூசருக்கான பேட்டரி விவரங்கள் எதையும் தற்போது வரை முற்றிலுமாக வெளியிடவில்லை. அதேநேரம், சிறந்த மற்றும் ஆற்றல்மிக்க பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்படும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, 49 KWh மற்றும்  61 KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.  சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனானது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷனுக்கும், பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஃப்ரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனிற்கு வழங்கப்படலாம். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இதற்கு வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள் - வெளியீடு:

இந்தியாவில் பல்வேறு வேரியண்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களில் புதிய அர்பன் க்ரூசர் அறிமுகப்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. விழாக்காலத்தை இலக்காக கொண்டு கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். அதன்படி இதன் விலை 20 முதல் 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  அர்பன் க்ரூஸர் EV, மின்சார SUV-க்கு மாற விரும்புவோருக்கு மலிவு விலையில் கிடைக்கும், அதேநேரம் கவனத்தை ஆப்ஷனாக இருக்க வேண்டும் என டொயோட்டா திட்டமிட்டுள்ளது. குஜராத்தின் சுசூகி ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்த கார் மாடல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Read Entire Article