Toyota Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டில் டொயோட்டா அறிமுகப்படுத்த உள்ள கார்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்:

டொயோட்டா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக திகழ்கிறது. விற்பனையிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. சுசூகி நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் மற்றும் பழக்கம் காரணமாக உள்நாட்டில் வலுவான கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொடர்ந்து, 2030ம் ஆண்டுக்குள் 15 புதிய மாடல்களை கொண்டு வந்து தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டில் 4 எஸ்யுவிக்கள் மற்றும் ஒரு பிக்-அப் ட்ரக் என மொத்தம் 5 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளதாம்.

1 & 2. புதிய தலைமுறை ஹிலக்ஸ் & ஃபார்ட்சுனர்:

டொயோட்டா நிறுவனம் புதிய ஒன்பதாவது தலைமுறை ஹிலக்ஸை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் எதிர்கால SUV திட்டங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக ஃபார்சட்சுனருடன் அது பகிர்ந்து கொள்ளும் வலுவான இன்ஜின் இணைப்பைக் கருத்தில் கொண்டு. இந்த வெளிப்பாடு, அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனர் கூர்மையான அணுகுமுறை, கடுமையான தோற்றம் மற்றும் கணிசமாக அப்டேட் செய்யப்பட்ட கேபின் அமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேண்ட் க்ரூஸர் குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட டொயோட்டாவின் சமீபத்திய "டஃப் அண்ட் அஜில்" வடிவமைப்பு கான்செப்டை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட புதிய ஹிலக்ஸ், வெர்டிகல் ஸ்டேன்ஸ், ஒரு தடிமனான முன்பக்க ப்ரொஃபைல், மெலிதான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் வரவிருக்கும் ஃபார்ட்சுனரில் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சதுர வடிவ ஃபேசியாவைப் பெறுகிறது.

பெட்ரோல், டீசல், 48V ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார BEV மாறுபாடு ஆகிய பரந்த அளவிலான பவர்ட்ரெய்ன் விருப்பங்கள் ஹிலக்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இவை வரவிருக்கும் ஃபார்ட்சுனரில் பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹிலக்ஸ் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரக்கூடும் என்ற நிலையில், அடுத்த தலைமுறை ஃபார்ட்சுனரின் வருகையையும் நிராகரிக்க முடியாது.

3. புதிய லேண்ட் க்ரூசர் ப்ராடோ

சர்வதேச சந்தையில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ள டொயோட்டாவின் புதிய லேண்ட் க்ரூசர் ப்ராடோ, அடுத்த ஆண்டில் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராண்டின் TNGA-F லேடர் ஃப்ரேம் ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ப்ரீமியம் எஸ்யுவி ஆனது, 2.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினிற்கு ஆதரவாக 1.87KWh 2ஹைப்ரிட் பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் 326hp ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.

4. அர்பன் க்ரூசர் BEV

மாருதி சுசூகி ப்ராண்டின் முதல் மின்சார காரான இ-விட்டாரா அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதன் டொயோட்டா வெர்ஷனாக அர்பன் க்ரூசர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அண்மையில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 5 சீட்டர் எஸ்யுவி ஆனது, ப்ளாட்ஃபார்ம் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களில் இ - விட்டாராவை அப்படியே தொடர்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

5. அப்டேடட் அர்பன் க்ரூசர் ஹைரைடர்

அடுத்த ஆண்டின் ஒருபகுதியில் அர்பன் க்ரூசர் ஹைரைடரின் மிட்-சைக்கிள் அப்டேடட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேபினில் லெவல் 2 ADAS உள்ளிட்ட சில புதிய தொழில்நுட்ப வசதிகள் பெற்றாலும், பெரும்பாலானவை வெளிப்புற தோற்ற மேம்பாடாக இருக்கும் எனவே கருதப்படுகிறது. அதேநேரம், நன்கு பரிட்சயமான 1.5லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.