Toyota Upcoming Cars: டொயோட்டா அடுத்தடுத்து களமிறக்க உள்ள நான்கு ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்கள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்க்ரேட்களை பெறும் டொயோட்டாவின் 4 கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஓராண்டில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த டொயோட்டா நிறுவனம் அதிரடி முடிவுகளை வகுத்து வருகிறது. அதில் ஏற்கனவே உள்ள மாடல்களின் மேம்படுத்தப்பட்ட எடிஷன்களை சந்தைப்படுத்துவதும் அடங்கும். குறிப்பாக க்ளான்ஸா, அர்பன் க்ரூஸர் டெய்சர், இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகியவை பல அப்டேட்களை பெற உள்ளன. இந்த மிட்-லைஃப் அப்டேட்களானது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், புத்துயிரூட்டப்பட்ட வெளிப்புற தோற்றம், நவீன கேபின் அனுபவம் ஆகியவற்றை வழங்கி விற்பனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்க்ரேடாகும் டொயோட்டா கார்களின் விவரங்கள்:

1. க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான டொயோட்டா, க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை அக்டோபருக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட முன்பக்கத் தோற்றம், கூர்மையான முன்பக்க க்ரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்புகளுடன் வரும்.

லெவல் 2 ADAS: ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு இடம்பெறும்.

புதிய இன்ஜின்: தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNG வேரியன்ட், சிறப்பான மைலேஜுக்காக ட்யூன் செய்யப்பட்ட 1.2-லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 83hp பவரையும் 112Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

புதிய அம்சங்கள்: வென்டிலேடட் முன் இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ+ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டைனமிக் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2. டெய்சர் ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா டெய்சர் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைக்கால ஃபேஸ்லிஃப்ட்டைப் பெறும். இது, மறுவடிவமைக்கப்பட்ட LED பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய புதிய முன்பக்கத் தோற்றத்தையும், பல சிறப்பம்சங்களையும் பெறும்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: டெய்சர் ஃபேஸ்லிஃப்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் அசிஸ்ட், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் இடம்பெறும். இதில் 6 ஏர்பேக்குகள், மேம்படுத்தப்பட்ட 360-டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா சிஸ்டம் போன்ற பிற அம்சங்களும் இடம்பெறும்.

தொழில்நுட்ப மேம்பாடுகள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளுடன் கூடிய பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சன்ரூஃப் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

பவர்டிரெய்ன்கள்: 1.2L 3-சிலிண்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0L டர்போ பெட்ரோல் ஆப்ஷன்கள், மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு ஹைப்ரிட் எடிஷனும் விரைவில் வரக்கூடும்

இதையும் படியுங்கள்: Toyota Cheapest Car: டொயோட்டாவின் மலிவான காருக்கு அப்க்ரேட்..! லெவல் 2 ADAS, புது இன்ஜின் - வேற என்ன? விலை எப்படி?
3. இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்

இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் சாலை பரிசோதனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய மேம்படுத்தல்கள்

புதிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்: முழு டிஜிட்டல் 12.3-இன்ச் ட்ரைவர் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய பெரிய, உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கேபின் அப்டேட்கள்: மேம்படுத்தப்பட்ட மசாஜ் வசதிகளுடன் கூடிய திருத்தப்பட்ட ஒட்டோமான் பாணி கேப்டன் இருக்கைகள், பின் இருக்கைப் பயணிகளுக்கான வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் மற்றும் மென்மையான தொடு உணர்வு கொண்ட உட்புற டிரிம் மேம்பாடுகள் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

மேம்படுத்தப்பட்ட ADAS: புதிய இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட், மென்மையான லேன் ட்ராக்கிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரேடார் ரெஸ்பான்ஸ் அம்சங்களைக் கொண்ட திருத்தப்பட்ட டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 தொகுப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஹைரைடர் ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா இன்னோவா ஹைரைடர் ஃபேஸ்லிஃப்ட், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெவல் 2 ADAS: ஃபார்வர்ட் கொலிசன் வார்னிங், ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலெர்ட், லேன் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிற அம்சங்களுடன் கூடிய மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு வழங்கப்படும்

கேபின் அப்டேட்கள்: பவர்ட் அட்ஜெஸ்ட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் பவர் டெயில்கேட் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்ஜின் தேர்வுகள்: இந்த மிட்-சைஸ் எஸ்யுவி, 1.5-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் செயல்திறன் மிக்க 1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும்.