விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளார். அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள், கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா எனும் நோக்கில், மாவட்ட வாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.206 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.206 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. 2023 ஏப்ரலில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க நிதி கோரியிருந்தது போக்குவரத்துத்துறை. ரூ.206 கோடியை வட்டியில்லா குறுகிய கால கடனாக போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு தொகையை வழங்க வேண்டும் என மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்

கண்ணை கட்டும் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 60 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் விலை 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 540 ரூபாயாக உள்ளது.

குழந்தை உயிரை பறித்த கேரட்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கேரட் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கியதில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. மயங்கிய குழந்தைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவனையில் முதலுதவி |செய்த பிறகு ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே குழந்தை இறந்துள்ளது.

பொது சிவில் சட்டம்

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலாகிறது. இதற்கான இணையதளத்தை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி இன்று தொடங்கி வைக்கிறார் . நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துகிறது

ஆட்கொல்லிபுலி சடலமாக கண்டெடுப்பு

வயநாடு அருகே பெண்ணை அடித்துக் கொன்ற ஆட்கொல்லிபுலி, இன்று அதிகாலை சடலமாக கண்டெடுப்பு. உயிரிழப்பின் காரணம் உடற்கூராய்வுக்குப் பிறகு தெரியவரும் என கேரள வனத்துறை தகவல். புலியால் பெண் கொல்லப்பட்ட பிறகு அப்பகுதியில் கடும் அச்சம் நிலவியது. அப்பகுதி மக்கள் போராட்டத்தை அடுத்து புலியை சுட்டுப்பிடிக்க அம்மாநில வனத்துறை முடிவு செய்து, தீவிரமாக தேடப்பட்டது

கைதால் தலைகீழான வாழ்க்கை

”மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர். டிவியில் புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தை சந்திக்கிறது. எனக்கு நீதி வேண்டும்" நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்து, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா

அமெரிக்காவிடம் பணிந்த கொலம்பியா

சட்டவிரோத குடியேறிகள் அடங்கிய விமானத்தை ஏற்க மறுத்த கொலம்பியா மீது, அமெரிக்கா வரி தாக்குதல் தொடுத்தது. இறக்குமதி பொருட்களுக்கான வரி ஒரு வாரத்தில் 50 சதவிகிதம் ஆக உயர்த்தப்படும் எனவும் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, சட்டவிரோத குடியேறிகளின் விமானத்தை ஏற்க கொலம்பியா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியா Vs இங்கிலாந்து 3வது டி20

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நாளை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.

அரையிறுதியில் இந்திய அணி

ஜுனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 6 சுற்றில் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்திய நிலையில், அதே பிரிவில் இடம்பெற்ற இலங்கை - ஸ்காட்லாந்து இடையேயான போட்டி மழையால் ட்ரா ஆனது. இதையடுத்து, குரூப்-1ல் இருந்து இந்தியாவும், ஆஸ்த்ரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.