Top 10 News: ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு! தங்கம் விலை உச்சம்! ஆப்பிள் நிகழ்வில் என்ன ஸ்பெஷல்? டாப் 10 செய்திகள்

3 months ago 4
ARTICLE AD

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை ஒட்டி சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்காக இன்று (செப்.9) முதல் செப்., 15 வரை 144 தடை உத்தரவு அமல் வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதியின்றி ராமநாதபுரத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; ராமநாதபுரத்தில் இன்று முதல் செப்., 15 வரையிலும், அக்., 25 முதல் அக்., 31 வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"கார், டூ வீலர் விலை குறைப்பு எவ்வளவு என விளம்பரம்"

ஜிஎஸ்டி குறைப்பால் கார், டூ வீலர் எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்துக - கார் மற்றும் டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் இடம் பெற வேண்டும் - மத்திய அரசு; ஜிஎஸ்டி குறைப்பால் கார், டூ வீலர் விலை கணிசமாக குறைய உள்ள நிலையில் புதிய அறிவுறுத்தல்

உச்சத்தில் தங்க விலை

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு
ஒரு சவரன் - ரூ. 81,200-க்கும், ஒரு கிராம் - ரூ. 10,150-க்கும் விற்கப்படுகிறது

ஆசியக்கோப்பை தொடக்கம்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் இன்று(செப்.9) தொடக்கம். முதல் போட்டியில் ஹாங்காங் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

வெள்ளபாதிப்பு - பிரதமர் ஆய்வு

இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்று(செப்.9) ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாட்டில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை

மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள ஜுனியர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
நவம்பர் 28ஆம் தேதி மதுரையில் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இறுதிப்போட்டி சென்னையில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சைபர் கிரைம் மோசடி - ரூ.314 கோடி மீட்பு!

2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் கிரைம் மோசடியில் ரூ. 1010 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல். கடந்த 7 மாதங்களில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன! இழந்த பணத்தில் ரூ. 314 கோடியை சைபர் கிரைம் முடக்கி இருப்பதாகவும், ரூ.62 கோடியை மீட்டு புகார்தாரரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிப்பு.

ஆப்பிள் நிறுவனம பிரத்யேக நிகழ்வு

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெற உள்ள நிலையில், ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது! இந்திய நேரப்படி இரவு 10.30 மணி அளவில் இந்நிகழ்வு தொடங்கும்!\

சிறையில் இருந்தவருக்கு இழப்பீடு

ம.பி: தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!கடந்த 2005-ல் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற சோஹன் சிங்-ன் தண்டனைக்காலம் மேல் முறையீட்டுக்கு பின் 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் விடுதலை செய்யப்பட்டார்.

சீனா அழைப்பு!

ட்ரம்ப்பின் வர்த்தக சாவல்களை எதிர்கொள்ள, BRICS நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீனா அழைப்பு! BRICS நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும். நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை

Read Entire Article