எதிர்க்கட்சிகளின் பொய்கள் எடுபடவில்லை - ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் மீது மக்களுக்கு உள்ள |நம்பிக்கையையும், ஆதரவையும் சிதைக்க எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. திமுக வேட்பாளரை எதிர்கொள்ள முடியாமலும் மக்களை சந்திக்க வலிமையில்லாமலும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் மடல்

ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம் - தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒடி விஜய் கடிதம்

தமிழகம் முழுவதும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள்

முகூர்த்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இன்று பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிவிப்பு

ரயில் பயணிகளுக்காக ஒரு சூப்பர் செயலி - விரைவில் அறிமுகம்

இந்திய ரயில்வேயின் முக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், 'SwaRail' என்ற செயலியை| விரைவில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், PNR விவரம், ஓடுதல் நிலை, ரயில் தேடல், பெட்டிகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளை இச்செயலி மூலம் பெறலாம். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இச்செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

வாகனம் கவிழ்ந்து 9 பேர் பலி

அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர்.

மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

ஐதராபாத்: தெலங்கானா, ஆந்திராவில் 80 வழக்குகளில் குற்றம் |சாட்டப்பட்ட மிகவும் தேடப்படும் குற்றவாளியான பதுலா பிரபாகர் கைது! போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பி செல்ல முயன்ற பதுலா பிரபாகரை சுற்றிவளைத்து அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 23 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்! 2022ல் அனகப்பள்ளி நீதிமன்றத்திலிருந்து விசாகப்பட்டினம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானார் பதுலா பிரபாகர்

சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு. இந்த தாக்குதல்கள் அவர்கள் வசிக்கும் குகைகளை அழித்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்! ISIS பயங்கரவாதியைப் பல ஆண்டுகளாகவே அமெரிக்க ராணுவம் குறிவைத்து இருந்ததாகவும், ஆனால், இதற்கு முன்பு அதிபராக இருந்த பைடன் விரைவாகத் தேவையான உத்தரவைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்

கம்பீர் நம்பிக்கை

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்திய அணி துபாய் செல்ல உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக (பிப்.23) நடைபெறும் ஒரு போட்டியை மட்டுமே முக்கியமானதாக கருதவில்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது ரசிகர்கள் இடையே உணர்ச்சிகள் அதிகமாக இருப்பது இயல்புதான். தொடரில் உள்ள 5 போட்டிகளையும் வெல்ல நாங்கள் தீவிரமாக முயற்சி செய்வோம் - பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கம்பீர் பேச்சு

இறுதி யுத்தம்!

U19 மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் |இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணியினர் தீவிரம்

தொடருமா ஆதிக்கம்?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா.