Top 10 news: பாஜக நிர்வாகி கைது.. 26 வருட சோகத்தை முடிப்பாரா பவுமா- டாப் 10 செய்திகள்

6 months ago 5
ARTICLE AD

இப்படியும் மோசடியா?

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் பல ஆண்டுகளாக ஊரை ஏமாற்றி வீட்டிற்குள் சுரங்கப்பாதை அமைத்து, பல கோடி மதிப்பிலான டீசலை திருடி வந்த கும்பல் போலீஸில் சிக்கியது, வீட்டை வாடகைக்கு எடுத்து மினரல் வாட்டர் விற்பனை செய்வதாகக் கூறி, 25 அடி ஆழத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பைப்லைனில் இருந்து திருடியுள்ளனர்.

இதுக்கெல்லாம் புகாரா?

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிஷா என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 Follower-கள் குறைந்ததால் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார். கணவர் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதால் தான் ரீல்ஸ் எடுக்க நேரமில்லை என்றும், தனது 2 Follower-கள் குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்; இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

பாஜக நிர்வாகி கைது

பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், ரவுடியுமான 'மிளகாய் பொடி' வெங்கடேசன் பொன்னேரி கிளைச் சிறையில் அடைப்பு. அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலவச டிக்கெட்டில் தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான நிர்வாகம் தகவல்.வார விடுமுறை என்பதால் 31 அறைகளும் நிரம்பியதால் 2 கி.மீ வரை வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள். நேற்று மட்டும் 75,096 பேர் தரிசனம் செய்து ரூ.3.93 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

விமான விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு!

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு.ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல்

சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை:

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், குடியிருப்புகள் அருகே கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

ஆழியார் - வால்பாறை சாலையிலும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்களிலும் சகஜமாக வந்து செல்லும் இந்த யானை, தற்போது மலைவாழ் மக்களுக்காக கட்டப்படும் குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் முகாமிட்டுள்ளது.சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் பதில் தாக்குதல்!

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளில் ஈரான் பதில் தாக்குதல்.ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் பலி, 41 பேர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் தகவல்

கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

பிரபல கிராமிய பாடகி 'கலைமாமணி'கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) வயது மூப்பால் உயிரிழப்பு.ஆண்பாவம்' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார்.

ஈரானில் 78 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பொதுமக்கள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டனர்; 320 பேர் படுகாயம்.தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய படைத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்கள் உயிரிழப்பு; இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு: 50 பேர் காயம் எனத் தகவல்

இறுதிக்கட்டத்தில் WTC இறுதிப்போட்டி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியை நெருங்கியது தென் ஆப்பிரிக்க அணி, 282 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னமும் 69 ரன்களே தேவை; 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்திருந்தது

Read Entire Article