கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புடைய, 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். கடத்தல்காரரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.

2 தீவிரவாதிகள் கைது

பாஸ்குசன் வனப்பகுதியில் லஷ்கர்-ஏ-தொய்பாவை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது. அவர்களிடம் இருந்து AK 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இதே வனப்பகுதியில் இரு இடங்களில் என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

போதைப் பொருள் விற்பனை - 3 பேர் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்த அசாமை சேர்ந்த 3 பேர் கைது. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 19 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல்.

ட்ரம்ப் வரிக்கு தடை

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!வரிவிதிப்பை நிறுத்திவைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என தடையை நீக்கியது மேல்முறையீட்டு நீதிமன்றம்.

அன்புமணி ஆலோசனை

பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகளை சந்திக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார்.

புதிய கல்லூரிகள் திறப்பு:

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கே.வி.குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க உள்ளன

சென்னை மக்கள் படித்தவர்கள்:

சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என இங்கு வந்தபோது உணர்ந்து கொண்டேன். இவர்களோடு |ஒப்பிடுகையில் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவே.

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு குறையாது. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை” என்றார் ஜடேஜா

புறாவுக்கு உணவு-அபராதம்

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷாம்லா என்பவருக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!

2023ம் ஆண்டு ஷாம்லா புறாக்களுக்கு உணவளித்தபோதே அதிகாரிகள் எச்சரித்து அனுப்ப, மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டது மட்டுமன்றி புறாக்களை பிடிக்கவும் முயற்சித்துள்ளார்.

நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்த RBI-க்கு பரிந்துரை!

பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை!சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்து

பெரியாருக்கு காவி சாயம்- விஜய் விளாசல்

தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள்.. இதை வன்மையாக கண்டிக்கிறோம்" கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு.