Top 10 News: தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு, ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை - டாப் 10 செய்திகள்

10 months ago 7
ARTICLE AD

தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு

சென்னையில் 3-வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, 62 ஆயிரத்து 480 ரூபாய் என்ற இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் 105 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 840 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு - தேர்தல் பணிகள் தீவிரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வது, சிசிடிவி கேமராக்களை பொருத்துவது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் புதியதாக 5 விமான நிலையங்கள்

விமான சேவை மூலமாக பிராந்தியங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ், விமானங்கள இயக்குவதற்கும், சேவையை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ட்ரம்பை சந்திக்கும் மோடி

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றபின், ட்ரம்பை வரும் 13ம் தேதி பிரதமர் மோடி முதல்முறையாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாசிங்டன் டிசியில் நடைபெறும் சந்திப்பில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GST விகிதங்களில் மாற்றம்..?

GST-ஐ அமல்படுத்துவதில் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.வரி விகிதங்களில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. வெளிநாட்டு நிதி தடையின்றி வெளியேறுவதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது - GST, பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி செயலாளர் துயின்காந்த் பாண்டே விளக்கம்

அடக்கம் செய்வதில் போட்டி - மூத்த மகன் வைத்த கொடூர கோரிக்கை!

மத்திய பிரதேசம்: இறந்த தந்தையை யார் அடக்கம் செய்வது என்ற சண்டையில் தந்தையின் உடலை 2 பாதியாக வெட்டி, ஒரு பாதியை தனக்கும், மற்றொரு பாதியை தம்பிக்கும் அளிக்குமாறு கோரிக்கை வைத்த மூத்த மகன் கிஷான். கிஷானின் இந்த கொடூரமான கோரிக்கையால் சகோதார்களுக்குள் மோதல் ஏற்படவே, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இளைய மகனுக்கு அடக்கம் செய்யும் உரிமையை அளித்தனர்

சர்ப்ரைஸால் வந்த வினை

சீனா: காதலியை சர்ப்ரைஸ் செய்வதற்காக கேக்கிற்குள் மோதிரத்தை வைத்து PROPOSE செய்த காதலன். தவறுதலாக கேக்குடன் சேர்த்து தங்க மோதிரத்தையும் சாப்பிட்ட காதலி லியூ! தனக்காக காதலன் தயாரித்த கேக்கை சுவைத்தபோது வாயில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்த லியூ, முதலில் கேக்கின் தரம் சரியாக இல்லையோ என நினைத்துள்ளார். அதன்பின் சுதாரித்து அதை வெளியே எடுத்துள்ளார். இதனால் PROPOSAL நிகழ்ச்சி கலகலப்பானது

கனடா, மெக்ஸிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு தற்காலிக நிறுத்தம்!

கனடா, மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள், போதைப் பொருட்கள் நுழைவதை தடுக்க கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதல் 25% வரி விதிப்பு நடவடிக்கைக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

39 வயதில் ரொனால்டோ படைத்த சாதனை!

ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து தொடரில், அல் நசார் அணிக்காக தொடர்ந்து 2 கோல்கள் அடித்து அசத்திய 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது 30 வயது வரை 463 கோல்கள் அடித்துள்ள இவர், 30 வயதுக்குப் பிறகு 460 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். வரும் 5ம் தேதி 40 வயதில் அடி எடுத்துவைக்கிறார்

Read Entire Article