முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

விழுப்புரத்தில் கள ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறங்களிலும் திரண்டு உற்சாக வரவேற்பளித்த மக்கள். பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சீமானின் பொய் அம்பலம்?

”சீமானுக்கு பிரபாகரன் துப்பாக்கி சூடு பயிற்சியே அளிக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து புகைப்படம் எடுத்தார் சீமான்..!" விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்பட கலைஞர் அமரதாஸ் பரபரப்பு தகவல்

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் விலை 240 குறைந்து 60 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 510 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு. உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி.

தேர்தல் ஆண்டில் 87% அதிகரித்த பாஜகவின் நன்கொடை

மக்களவைத் தேர்தல் நடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.3,967 கோடி நன்கொடையை பெற்றுள்ளது பாஜக. முந்தைய நிதியாண்டில் பெற்ற ₹2,120 கோடியை விட தேர்தல் ஆண்டில் 87% நன்கொடை அதிகரித்துள்ளது. இதில் சுமார் ரூ.1,700 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. 2024ல் தேர்தல் பிரசாரங்களுக்கு ரூ.1,754 கோடி செலவூடுசய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது

INFOSYS இணை நிறுவனர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு. 2014ல் இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது பொய் குற்றச்சாட்டுகளை கூறி தான் பணி நீக்கம் செய்யப்பட்டு, சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக துர்கப்பா என்பவர் புகார் அளித்திருந்தார். உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் மீது நடவடிக்கை

இந்தியா-சீனா இடையே மீண்டும் விமான சேவை

இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உடன்பாடு. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும் கொள்கை அளவில் ஒப்புதல். இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியாவும் சீனாவும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன

இந்திய அணியின் வெற்றி தொடருமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது, 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இன்று தொடங்குகிறது 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

38வது தேசிய விளையாட்டுப் போட்டியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. டேராடூனில் நடைபெறும் 35 விதமான போட்டிகளில் 9,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.