Top 10 News: சிறுமிகளுடன் திசைமாறிய ராட்சத பலூன், கால்சனை மிஞ்சிய குகேஷ் - டாப் 10 செய்திகள்

11 months ago 7
ARTICLE AD

விருதுகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். பாரதியார் விருது பாடலாசிரியர் கபிலனுக்கும், பாரதிதாசன் விருது பொன். செல்வகணபதிக்கும், திரு.வி.க., விருது முத்து ரவீந்திரநாத்துக்கும், கலைஞர் விருது முத்து வாவாசிக்கும் வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலம்

மாட்டுப் பொங்கலை ஒட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை, தங்களது வீரத்தை வெளிப்படுத்தி காளையர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெறும் மாடுகளின் வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

திசை மாறி சென்ற பலூன்

பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பலூன் திசை மாறி கேரளாவில் தரையிறங்கியதால் பரபரப்பு. இதில் பயணித்த 2 சிறுமிகள் பத்திரமாக மீட்பு! கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் பலூன் தரையிறங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

யுஜிசி தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 15) நடைபெற இருந்த  17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடிக்காக காத்திருக்கும் மணிப்பூர்

பிரதமர் மோடியின் பயணத்துக்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு அவருக்கு நேரமும், ஆர்வமும், சக்தியும் இருக்கிறது. ஆனால் மணிப்பூரில் துயரத்தில் வாடும் மக்களை சந்திப்பது அவசியமானது என அவர் நினைக்கவில்லை - காங்கிரஸ்

மெட்டா நிறுவனத்திற்கு சம்மன்

மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க், “இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2024ல் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன” என தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தென்கொரிய முன்னாள் அதிபர் கைது

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி திரும்பப் பெற்ற விவகாரத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கு இந்தியா கோரிக்கை

ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

கால்சனை மிஞ்சிய குகேஷ்

கடந்த 2024ம் ஆண்டில் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் வென்றதன் மூலம் ரூ.13.6 கோடி ரூபாய் வருவாயை குகேஷ் ஈட்டியுள்ளார். செஸ் மூலம் அதிக வருவாய் ஈட்டியோர் பட்டியலில் அவரே முதலிடம் வகிக்கிறார். உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரூ. 5.45 கோடி வருவாயுடன் 4ம் இடத்தில் இருக்கிறார்.

ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் பண்ட்!

இந்திய வீரர் ரிஷப் பண்ட் 7 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் களமிறங்க முடிவு செய்துள்ளார். அதன்படி, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணிக்காக பண்ட் விளையாட உள்ளார்.

Read Entire Article