Top 10 News: குறைந்த ரெப்போ வட்டி! சொமேட்டோ பெயர் மாற்றம் - டாப் 10 செய்திகள்

10 months ago 7
ARTICLE AD

குறைந்த வட்டி:

வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த 11 முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாத நிலையில், தற்போது 6.5 % இருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தாமதம்:

182 பயணிகளுடன் மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 34 நிமிடம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கப்பட்டுள்ளது, இதேபோல் டெல்லியில் இருந்து 232 பயணிகளுடன் கோவை வந்த இண்டிகோ விமானம் தரையிறக்க முடியாததால் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

குறையும் சுங்க கட்டணம்:

ஆண்டுக்கு ஒருமுறை ₹3,000 சுங்கக் கட்டணம் அல்லது 15 ஆண்டுகளுக்கு ₹30,000 செலுத்தி ஆண்டு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி பயணிக்கும் புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம். தற்போது ₹340 செலுத்தி மாதம் முழுவதும் பயணிப்பவர்களுக்கும், ₹4,080 செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ₹1,080 மிச்சமாகும். இத்திட்டத்தில் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், பாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும்.

இன்று முக்கிய தீர்ப்பு;

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் தொடர்புடைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் தீர்ப்பு வழங்குகிறது அம்மாநில உயர்நீதிமன்றம். சித்தராமையா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த நிலமோசடி புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கிலும், கர்நாடக லோ அயுக்தா போலீசார் தொடர்ந்த போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா தொடர்ந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

விமான பயணி திடீர் மரணம்

மதுரையில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த மேலூர் பயணி பிரகாஷ் (35) மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்; கொச்சின் போலீசார் விசாரணை. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கொச்சின் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்ட போதிலும் அப்பயணியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

பெயர் மாற்றம்:

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் பெயரை Eternal என மாற்றி புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல்

சர்வதேச திரைப்பட விழாவில் பறந்து போ

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பறந்து போ' திரைப்படத்தை கைத்தட்டி பாராட்டிய பார்வையாளர்கள்! ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கோடை காலத்தில் திரைக்கு வரவுள்ளது.

யானை தாக்கி பாகன் உயிரிழப்பு:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே திருவிழாக்காக கூட்டி வரப்பட்ட யானை திடீரென மிரண்டு ஓடி பாகனை மிதித்துக் கொன்றதால் அதிர்ச்சி. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.மேலே இருவர் அமர்ந்திருக்க மிரண்டு ஓடும் யானை, பாகனை மிதித்துக் கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Read Entire Article