இந்தி மட்டுமா உள்ளது?

ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள்.நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? |ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு.ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

தொடங்கியது பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம். 3,316 தேர்வு மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம்

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் நாடுகள் ஆதரவு. இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் உறுதி

சம்பளம் உயரவில்லை

இந்தியாவில் தொழிலாளர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன, ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் பணவீக்கத்துக்கு ஏற்ப உயரவில்லை. இதற்கு திறன் குறைவே காரணம். திறன் அதிகரிக்கும்போதுதான், உற்பத்தி அதிகரிக்கும், ஊதியமும் அதிகரிக்கும் என நிதி அயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறியுள்ளார்.

விருதுகளை அள்ளிய அனோரா

97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை வென்றது 'அனோரா' படம். சிறந்த திரைப்படம், திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை என முக்கிய பிரிவுகளில் விருதுகளை குவித்து அசத்தியது.

காதலியின் தாயிடம் கொலை முயற்சி

தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கழுத்தை நெறித்த கொலை செய்ய முயன்ற காதலன் கைது.கரீம்நகரைச் சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்து சிறையில் போலீஸ் அடைத்தனர். செபி முன்னாள் தலைவர்

செபி முன்னாள் தலைவர் மீது FIR

செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவுபங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடம் பகுதியில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து மீனவர்கள் 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தல்.

ஒரே போட்டியில் 5 விக்கெட்:

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஒரே போட்டியில் இரு முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை |நியூசிலாந்து வீரர் மார்க் ஹென்றி மற்றும் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்