மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, தேனி, மதுரை, நாகை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்

கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் மே மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல். கோயம்பேட்டிலிருந்த புறநகர் பேருந்து நிலையம், அங்கு மாற்றப்பட்ட பிறகு போதுமான இணைப்பு வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ரயில்வே நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

மத்திய அரசு அறிவிப்பு

பஞ்சாப்பில் போராடி வரும் விவசாயிகளுடன் பிப்ரவரி 14-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு, அரசு சட்டப்படியான உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி உறுதி

பாட்னாவில் நடந்த 'சம்விதான் சுரக்ஷா சம்மேளன்' நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டு வரம்பை தற்போதைய 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்” என பேசினார்.

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவர் கைது!

நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய விஜய்தாஸ் என்பவர் கைது. 35 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், தானேவில் தலைமறைவாக இருந்த நபர் கைது.

அமெரிக்காவில் சேவைகளை நிறுத்திய டிக்டாக்

அமெரிக்காவில் TIK TOK செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், தனது சேவைகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவிப்பு. அமெரிக்க அரசின் டிக் டாக் செயலி தடை சட்டத்தை அண்மையில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

நேதன்யாகு எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் நிலையில், பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதி மீறல் இருந்தால் அதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது. ஒப்புக்கொண்டபடி தன்வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும் -நெதன்யாகு

சசி தரூர் ஆவேசம்

”சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சராசரி 56, விஜய் ஹசாரே போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 212*, கடைசியாக தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியபோது சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இல்லை. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் ஈகோ பிரச்னையில் ஒரு வீரரின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்" சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆவேசம்

விராட் கோலிக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவுறுத்தல்

விராட் கோலி நிறைய சிவப்பு பந்து (டெஸ்ட்) போட்டிகளில் விளையாட வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூனில் தொடங்கவுள்ளது. அந்நாட்டின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் ஏப்ரலில் தொடங்கும். புஜாராவைப் போல ஏதேனும் ஒரு கவுண்டி அணியில் சேர்ந்து விளையாடினால், சிறந்த பயிற்சியாக இருக்கும் -சஞ்சய் மஞ்ச்ரேக்கர்