முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம். பறவைகளுக்கு உணவு, குடிநீர் வழங்கும் புகைப்படத்தை X தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்

மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்

செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல். அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ் மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துவரி செலுத்த இன்றே கடைசிநாள்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்த இன்று கடைசிநாள். நடப்பாண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை. விடுமுறை நாளாக இருந்தாலும், வரியை செலுத்த ஏதுவாக மாநகராட்சி வருவாய்த்துறை இன்று செயல்படும் என தெரிவிப்பு

நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு

"தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை (ஏப்.1) முதல் திருந்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும்” தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் | தாம்பரம்- புழல் நெடுஞ்சாலையில் உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படும்; இந்த கட்டணம் 2026, மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

எம்புரான் படத்தின் 3 நிமிடக் காட்சிகள் நீக்கம்

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தில் 3 நிமிடக் காட்சிகள் நீக்கம்; குஜராத் கலவரக் காட்சிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பை அடுத்து முடிவு. நேற்றிரவு ஆலோசனை நடத்திய தணிக்கை வாரியம் முதலில் 20 நிமிடக் காட்சிகளை மாற்ற வேண்டும் என கூறிய நிலையில் தொடர்ந்து நடந்த ஆலோசனையில் 3 நிமிடக் காட்சிகளை மட்டும் மாற்ற தணிக்கை வாரியம் அறிவுறுத்தல்

ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த மிரட்டலால் பரபரப்பு!

"அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தால் ஈரான் மீது குண்டு வீசுவோம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல். இதையடுத்து ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதின் மீது கோபம் - ட்ரம்ப்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நீக்கி அந்நாட்டில் இடைக்கால அரசை நியமிக்க புதின் கூறிய கருத்தால் கோபம் அடைந்திருப்பதாக டிரம்ப் அறிவிப்பு. புதினுடன் நல்லுறவு இருப்பதாகவும் புதின் சரியானவற்றை செய்யும்போது, கோபம் சரியாகிவிடுவதாக கருத்து

மும்பை - கொல்கத்தா இன்று மோதல்:

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டுகிறது.

சொதப்பும் ஓபனிங் - ருதுராஜ் கெய்க்வாட்

பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய CSK கேப்டன் ருதுராஜ், “எதிர்பாராத விதமாக எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. அது மட்டும் அமைந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும். திரிப்பாதியால் ஒப்பனிங்கில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும். நான் Middle Over-களில் இறங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணிணோம்" என பதிலளித்துள்ளார்.