இந்தியை ஆட்சி மொழியாக்கும் திட்டம் - ஸ்டாலின்

"ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கும் முயற்சிதான் இந்தித் திணிப்பு. இதை நேரடியாக சொன்னால் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதால்தான் மும்மொழிக் கொள்கையில் இந்தியை வலியுறுத்தவில்லை என்றும், ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்றும் பாஜக அரசு பசப்புகிறது” - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழுக்கு முக்கியத்துவம் - அமித் ஷா

”பிரதமர் மோடி தலமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியம் அளித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்பிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” - அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

2024ம் ஆண்டில் குறைந்த கொலை, கொள்ளை வழக்குகள்

தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகள் குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தகவல். ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 10%, கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17%, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது. காவல்துறை மேற்கொண்ட பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் என விளக்கம்

குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு - காவல்துறை எதிர்ப்பு

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் 2 தீட்சிதர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு. பாதிக்கப்பட்ட பெண் தற்போது வயது வந்தவர் என்பதாலும், வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காகவும் 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்ய முடியாது. சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதால், போலீசார் வழக்குத் தொடர்கின்றனர் -அரசு வழக்கறிஞர்

தடையற்ற மின்விநியோகம்

கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் -தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர்

எக்ஸ் ஹேக் - டி. இமான் ஷாக்

தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் டி. இமான் அறிவித்துள்ளார். தவறான, அங்கீகரிக்கப்படாத பதிவுகள் ஏதேனும் தனது கணக்கில் தென்பட்டால் அதை பொருட்படுத்த வேண்டம் என வேண்டுகோள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11-ம் தேதிகளில் வாய்ப்பு

நிலவு சிவப்பாக மாறும் அரிய நிகழ்வு

வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது! ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும்.

ஷமிக்கு குவியும் ஆதரவு

முகமது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தவறு என்றும், அவர் பாவம் செய்துவிட்டார் எனவும் சர்ச்சையாக பேசிய இந்திய முஸ்லீம் ஜமாஅத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்விக்கு பலரும் எதிர்ப்பு. சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என ஷமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து

மீண்டும் களமிறங்கும் சுனில் சேத்ரி

கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய ஜாம்பவானான, சுனில் சேத்ரி மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், அவர் விளையாடுவார் என கூறப்படுகிறது.