Top 10 News Headlines: வியாபாரத்திற்கு ரெடி, முக்கிய கட்சிக்கு தடை, ஐபிஎல் எப்போ? - டாப் 10 செய்திகள்

7 months ago 6
ARTICLE AD

சித்திரை முழு நிலவு மாநாடு

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டாக பங்கேற்கின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்

பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக காலை மதுரை மூன்றுமாவடி வந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை ஆற்றினர். ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

செல்லூர்  ராஜு விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசிய தாக வந்துள்ள செய்திகள் தவறு,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார், எங்க குடும்பமே முன்னாள் இராணுவ வீரர்களை கொண்டது. இன்று நேற்று நாளை எப்பொழதும் மதிக்கிறேன்” என விளக்கமளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை

எல்லையில் பாகிஸ்தான் உடன் நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததால், ஜம்மு & காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எதுக்கு அமெரிக்கா? ஓவைசி கேள்வி

பாகிஸ்தான் தனது மண்ணை, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி என்பதே கிடையாது. சண்டை நிறுத்தம் இருக்கிறதோ இல்லையோ, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் விடக்கூடாது 1972 சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து, இந்தியா - பாக். விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை நாம் எப்போதுமே விரும்பியது இல்லை. இப்போது ஏன் ஏற்க வேண்டும்?. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் இனி துணை போகாது என அமெரிக்கா உத்தரவாதம் கொடுக்கிறதா?” - ஓவைசி

அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பஞ்சாப் அமிர்தசரஸில் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை. சாலையில் நடமாடவோ, மாடி அல்லது பால்கனிக்கு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அமிர்தசரஸில் மின்சார விநியோகிக்கப்பட்டாலும் ரெட் அலர்ட் தொடர்வதாக காவல் துறை தகவல்

ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப்போகிறேன். மேலும், 1000 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா? என்பதைப் பார்க்க இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சண்டை நிறுத்த முடிவில் சிறப்பாக பணியாற்றிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைகளை கடவுள் ஆசீர்வதிப்பாராக !!!" - டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்

செல்லப்பிராணிக்காக உயிரை விட்ட நபர்

கடற்கரையில் வாக்கிங் சென்றபோது, எதிர்பாராத விதமாக அலையில் சிக்கிய வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற உரிமையாளர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு. கடலுக்குள் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும் உயிரிழந்துள்ளார். எனினும் நாய் சிறு காயங்களுடன் கரையை அடைந்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்ட விரோதம் என அக்கட்சி தெரிவிப்பு. கடந்தாண்டு நடந்த நாட்டை விட்டு தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா மீதும் அங்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலில் உடன்பாடு எட்டப்பட்டதால், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல். அடுத்த வார இறுதிக்குள் போட்டி மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.

Read Entire Article