மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று இரண்டாவது நாளாக வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்பித்தும் பெயர் விடுபட்டோர் பெயர் சேர்க்க படிவம் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 ரயில்கள் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசம்பர் 30ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மகாத்மா காந்தி பெயரிலான வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு ரத்துச் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனவரி 5ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் சிமெண்ட் மூட்டை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புடின் காட்டமாக விமர்சித்துள்ளார்

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே இந்திய அணி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இலங்கை அணிகள் இடையேயான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது