Top 10 News Headlines: மோடிக்கு விருது! டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப்! பணிந்த உக்ரைன்

9 months ago 6
ARTICLE AD

கும்பமேளாவில் சிறந்த சேவை வழங்கிய ஜியோ!

மகா கும்பமேளா நடைபெற்ற பிரக்யாராஜ் பகுதியில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் |ஜியோ சிறப்பான சேவை வழங்கியதாக Ookla என்ற தனியார் நிறுவனத்தின் ஆய்வில் தகவல். அதிசு பக்தர்கள் கூடிய ஜனவரி 26ம் தேதி கூட ஜியோ 5G சேவை சிறப்பாக செயல்பட்டது எனவும், ஏர்டெல் மற்றும் BSNL நிறுவனங்களின் 4G Download வேகத்தை காட்டிலும் ஜியோ வேகமாக செயல்பட்டதாகவும் ஆய்வில் தகவல்.

புதிய டெஸ்லா கார் வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.

வெள்ளை மாளிகைக்கு எடுத்துவரப்பட்ட காரில் எலான் | மஸ்குடன் அமர்ந்து காரை ரசித்தார். சலுகை விலையில் கொடுப்பதாக மஸ்க் சொல்லியும் கேட்காமல், முழு தொகையான $80,000 கொடுத்துப் பெற்றுக்கொண்டார்.

உக்ரைனில் போர் நிறுத்தம்

ரஷ்யா உடன் நடைபெற்று வரும் போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம். சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல். ரஷ்யா உடன் பேசி (விரைவில் போர் நிறுத்தத்தை கொண்டு வர ஜெலன்ஸ்கி கோரிக்கை

நிர்மலா சீதாராமன் கேள்வி

"அநாகரிகம் என தர்மேந்திர பிரதான் கூறியதையே திரும்பப் பெற வைத்தீர்கள்; ஆனால் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும், மாலை போட்டு மாட்டி வைத்துள்ளீர்கள்" மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு.

மாற்றம் இல்லை:

தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் என்ற எனது கருத்தில் மாற்றம் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார். பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தர்மேந்திர பிரதான், மக்களை திசைதிருப்பும் உத்தியாக மொழிப் பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளதாக விமர்சனம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி:

"தமிழ்நாட்டின் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது; தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயில்கிறார்கள்" 1,635 பள்ளிகள் வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பயில்கின்றனர்; மூன்றாவது மொழியை படிக்க அவசியம் இருந்தால் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்? தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது எங்களின் ஆணி வேரோடு ஒன்றாக கலந்ததும் கூட -அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிவு.

பள்ளி 1000 ரூ ஊக்கத்தொகை:

6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்" புதுச்சேரி நிதியமைச்சரும், முதலமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிப்பு.

இறுதிப்போட்டியில் டெல்லி:

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முன்னேறி டெல்லி கேப்பிடல் அணி அசத்தல்! புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி. பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை

உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்:

உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை அமைக்க மான்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளதுஇங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது; இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.

பிரதமர் மோடிக்கு விருது:

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய 'The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean' விருது வழங்கப்படும்.மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்குலாம் அறிவிப்பு இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி என்பதும் இது அவரின் 21-வது சர்வதேச விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article