வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. நேற்று இரவு வீட்டில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். இன்று வீடு திரும்ப வாய்ப்பு

திருமாவளவன் அறிவிப்பு

"மயக்க வார்த்தைகள் பேசினாலும்.. பதவி ஆசை காட்டினாலும்.. நெருக்கடிகளைத் தந்து மிரட்டினாலும்.. கொள்கையில் எந்த சமரசமும் இன்றி களமாடுவதுதான் விசிக. சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம் இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம்" - தொல். திருமாவளவன், விசிக தலைவர்

புதுக்கோட்டை மோதல் விவகாரம்

புதுக்கோட்டை: வடகாடு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் |நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை. இரு தரப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்து விசாரணை. இந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி

திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தவறி விழுந்த 3 பேர் உயிரிழப்பு சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழப்பு; சந்தியாவந்தனம் செய்யும்போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200க்கு விற்பனை. ஒரு கிராம் விலை ரூ.125 உயர்ந்து 9 ஆயிரத்து 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முறைகேடு - 7 பேர் கைது

போலி ஆவணங்கள் பயன்படுத்தி நீட் தேர்வு எழுத முயன்ற குற்றச்சாட்டில், ராஜஸ்தானைச் சேர்ந்த 5 பேர், பீகாரில் ஒருவரும், கேரளாவில் ஒரு பெண் உள்பட 7 பேர் இதுவரை கைது. கைதானவர்களில் ஒருவர் மருத்துவர், மூவர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்களிடம் இருந்து ரூ.50,000க்கும் மேல் ரொக்கப் பணம், போலி ஆவணங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் பறிமுதல்.

தகவல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை, அவர்களின் உறவினர்கள் யாராவது நீதிபதிகளாக இருந்துள்ளார்களா? போன்ற விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியீடு. கடந்த ஏப்ரல் 1 முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களும் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சூர் பூரம் திருவிழா இன்று கோலாகலம்

கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம். முதலில் திருவம்பாடி கோயில் சார்பாகவும், தொடர்ந்து பாரமேக்காவு பகவதி அம்மன் கோயில் சார்பாகவும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. பூரம் திருவிழாவில் 92 யானைகள் பங்கேற்க உள்ளன. யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள், வனத்துறையின்ரோடு இணைந்து பரிசோதனை.

ஐபிஎல் இன்றைய போட்டி:

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் முறையே 3 மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகள் மோதும் இந்த போட்டி வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

ஐதராபாத் அணி வெளியேற்றம்

டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையிலான நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து. மழைகாரணமாக பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது! இதனால் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. ஐதராபாத் தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது