Top 10 News Headlines: மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000, பாக்., அமெரிக்கா ஆதரவு - 11 மணி செய்திகள்

4 months ago 4
ARTICLE AD

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு பிரதி மாதம் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

வேலை நிறுத்ததை கைவிடுக

“சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, பணப்பலன்கள் உறுதி செய்யப்படும். உண்மை நிலையை புரிந்து கொண்டு, மக்களின் நலன் கருதி வேலை நிறுத்ததை கைவிட வேண்டும்"-சென்னை மாநகராட்சி

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்றிரவு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.71 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா, சுங்கத்துறையால் பறிமுதல். கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது.
அதே விமானத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கடத்தி வந்த ரூ.18.67 லட்சம் மதிப்புள்ள எலக்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பதில்

“கேப்டன்தான் அரசியல் மானசீகக் குரு எனக் கூறிவிட்டு, நீங்கள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தினால், எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். எம்.ஜி.ஆர்.தான் என்னுடைய மானசீகக் குரு என்று கூறி அரசியல் செய்தவர் கேப்டன், அதனால் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்"

மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000

சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமங்.
இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.

மதுபோதையில் பேருந்தை கடத்திய முதியவர்

ஆந்திரா: ஒங்கோல் பேருந்து நிலையத்தில் சாவியுடன் விட்டுச் சென்ற அரசு பேருந்தை மதுபோதையில்  இருந்த முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு. பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்ற முதியவரை கர்னூல் மேம்பாலம் அருகே மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் விபத்தில் சிக்காமல் இருந்ததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நடவடிக்கை

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்க அரசு. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போக்குவரத்தை சீர் செய்யும் ரோபோ

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் ரோபோ ஒன்று போக்குவரத்தை சரிசெய்யும் வீடியோ இணையத்தில் வைரல். ‘குட்டி புலி' என பெயரிடப்பட்ட இந்த ரோபோவுக்கு பயிற்சி அளித்துள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள், இது சோதனை முறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி அறிவிப்பு எப்போது?

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அறிவிக்கப் படலாம் என தகவல். அடுத்த மாதம் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை இத்தொடரில், பும்ரா பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது.

ரொனால்டோவிற்கு நிச்சயதார்த்தம்

தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடிக்கிறார் போர்ச்சுக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி புகைப்படத்தை பகிர்ந்து ஜார்ஜினா அறிவிப்பு.

Read Entire Article