போத்தீஸில் ஐடி ரெய்ட்

தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய 20க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை அபிராமபுரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் மோடி

2023ல் இனமோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக செல்கிறார் பிரதமர் மோடி. ரூ.8500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு.

பதவியேற்பு விழாவில் ஜெக்தீப் தன்கர்

15வது குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து 53 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய ஜெகதீப் தன்கர், சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

சமையலுக்காக உயிரை விட்ட மனைவி!

உத்தரபிரதேசம்: தனது பேச்சையும் மீறி கணவர் நிகாம் (24) சிக்கன் சமைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி ரீனா (21). சைவம் சாப்பிடுபவரான ரீனா தடுத்தும் கேட்காமல், இரவில் மதுபோதையில் இருந்த நிகாம் சிக்கன் சமைத்துள்ளார். காலையில் பார்த்தபோது ரீனா இறந்து கிடக்கவே, அவரை ஆற்றின் அருகில் புதைத்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் நிகாம் மற்றும் அவரின் உறவினர்கள் இருவர் மீது வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை

“எனக்கும் உன்னைதான் பிடிச்சிருக்கு!"

பீர் அருந்தும் மனிதர்களின் வியர்வை வாசனையால் கொசுக்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஹோல் என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் தகவல்.
500 மனிதர்களை ஒரு அறையில் வைத்து கொசுக்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிக்குள் கைகளை மட்டும் நுழைத்து இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதில் மது அருந்துபவர்களை அதிக கொசுக்கள் கடித்துள்ளன.

"Waiting-லயே வெறியாகுதே!"

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள Lokah திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகளை The world of Lokah reveals its secrets என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவிப்பு. 'லோகா' Universe-ல் உள்ள புதிய கதாபாத்திரங்களை 2 அறிமுகப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் சரண் அடைந்த ஒரே ஒரு கைதி

நேபாளத்தில் வெடித்த வன்முறையில் தங்காடி பகுதியில் உள்ள சிறையில் இருந்து 692 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், ஒரே ஒரு கைதி மட்டும் மீண்டும் வந்து சரணடைந்துள்ளார்!
அடுத்த ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு தண்டனைக் காலம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சரண் அடைந்ததாக விளக்கம். வன்முறையை பயன்படுத்தி 25க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15,000 கைதிகள் இதுவரை தப்பி உள்ளனர்.

சாலை விபத்தில் நேர்ந்த துயரம்!

மெக்சிகோவில் சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து வெடித்து சிதறியதில் அவ்வழியாக வாகனங்களில் பயணித்த 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு. 18 வாகனங்கள் தீக்கிரையானதில் 90க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. அந்த இடமே போர்க்களமாக மாறிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

பிசிசிஐ தலைவராகும் சச்சின்?

BCCI-யின் புதிய தலைவராக முன்னாள் இந்திய வீரர் சச்சின் நியமிக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு அவரது எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் நிறுவனம் மறுப்பு. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அந்நிறுவனம் விளக்கம்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு

”இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் சண்டையை போன்று பார்ப்பது தவறானது” இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டிக்கு தடை கோரிய மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.