”பொறுப்பற்ற விஜய்”

"பொது வாழ்வில் ஆத்திசூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார். ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்” - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை

நீதிமன்றக் காவல்

கோவையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், நவம்பர் 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், இவரது சகோதரர் கார்த்திக் (21), இவர்களது உறவினர் குணா (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பைக் ரேஸின்போது பயங்கர விபத்து - இருவர் பலி

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில், ரேஸில் ஈடுபட்ட இளைஞரும், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம். ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே வந்த குமரன் ஆகியோர் உயிரிழப்பு. சோயல் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ரேஸை தடுக்க தடுப்புகள் வைத்திருந்தும் மீறி ரேஸ் சென்றுள்ளனர்.

பீகார் வாக்குப்பதிவு விறுவிறு

பீகார் சட்டமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3.75 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சூழலில், ஆயிரத்து 300-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரேசில் மாடல் அதிர்ச்சி

“இந்தியாவில் என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என்னை இந்தியனாகக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?” ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது பழைய படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடலான லாரிசா கேள்வி

அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால், ரஷ்யாவும் மீண்டும் சோதனைகளை தொடங்கும் வகையில் வரைவு திட்டங்களை தயார் செய்ய ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு. அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு புதின் கடும் எதிர்ப்பு.

நேபாளத்தில் ஒன்றிணைந்த இடதுசாரிகள்!

Gen Z போராட்டத்தை தொடர்ந்து நேபாளத்தில் 10 இடதுசாரிக் கட்சியினர் தங்களின் கட்சிகளை கலைத்துவிட்டு, 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர்கள் புஷ்ப கமலின் CPN (மாவோயிஸ்ட்), மாதவ் குமாரின் CPN (சோசலிஸ்ட்) உட்பட 10 கட்சிகள் ஒன்றிணைந்தன. ஒற்றுமை மாநாட்டில், புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக புஷ்ப கமலும் இணை ஒருங்கிணைப்பாளராக மாதவ் குமாரும் தேர்வு.

உலகெங்கிலும் பல்லாயிரகணக்கில் பணிநீக்கம்

2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Layoffs.FYI வலைதளத்தில் தகவல். அமேசான், இண்டெல், டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் அதிகபடியிலான பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன. AI-ஐ பயன்பாடும், மறுசீரமைப்பும் இதற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

தோனி ஓய்வா?

வரும் 2026ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என்றும், அவர் ஓய்வு பெறமாட்டார் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெல்லப்போவது யார்?

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டி20 போட்டி கராராவில் இன்று மதியம்|1.45 மணிக்கு தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளன. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.