Top 10 News Headlines: பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஈபிஎஸ் திடீர் உத்தரவு - டாப் 10 செய்திகள்

8 months ago 5
ARTICLE AD

மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநிலப்பட்டியலில் உள்ளவற்றை பொதுப்பட்டியலுக்கு மடைமாற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி - 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் SETC

கோடைக் காலத்தில் ஏராளமான மக்கள் வெளியூர் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு. முதற்கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே மாதம் முதல் வாரத்தில் இயக்க நடவடிக்கை. ஏற்கனவே பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணி இறுதியானதை தொடர்ந்து, இந்த கூட்டம் நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாஜக உடனான கூட்டணிக்கு அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் சரிவு

தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவடைந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ.8,720

பாட புத்தகங்களுக்கு இந்தியில் தலைப்பு

CBSE பாடத்திட்டத்தில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் புத்தக தலைப்புகளை ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தியில் மாற்றப்பட்டுள்ளதால் அதிர்ச்சி. இது அடிப்படை அறிவற்றது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையிலான கலாசார திணிப்பு என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கடும் கண்டனம். இதனை NCERT திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிப்பு. இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியை போலீஸ் தடுத்ததால் இரு தரப்புக்கும் மோதல் வெப்பு. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்ததாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள். |இதே விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மூர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது

விண்வெளி பயணம் மேற்கொண்ட மகளிர் மட்டும் குழு..!

வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய 6 பேர் கொண்ட குழு 10 நிமிட விண்வெளி பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோசின் தனியார் விண்வெளி நிறுவனமான BLUE ORIGIN-ன் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில், அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸ், புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி, நாசா முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தித் தொகுப்பாளர் கெயில் கிங் உள்ளிட்ட 6 பேர் பயணம்.

சீனாவை புரட்டிப்போடும் சூறாவளி!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவரும் நிலையில் 50 கிலோ எடைக்கும் குறைவாக உள்ளவர்கள் தூக்கி வீசப்படக் கூடும் என்பதால், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிப்பு. 300க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், வாகனங்கள், வீட்டின் மேற்கூரைகள் ஆகியவை தூக்கி வீசப்பட்டுள்ளன

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன.

இளம் வீரர் சேக் ரஷீத்திற்கு தோனி பாராட்டு

“சிறப்பான தொடக்கம் கிடைத்தால் ஏதாவது ஒரு பேட்டர் கடைசி வரை நிலைத்து ஆட வேண்டும். சேக் ரஷீத் கடந்த சில ஆண்டுகளாக எங்களுடன் பயணித்து வருகிறார். பயிற்சியில் பந்துவீச்சாளர்களை சிறப்பாக ஆடுகிறார்” தனது நேர்த்தியான பேட்டிங்கால் எதிர் அணியின் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமை அவரிடம் உள்ளது" - தோனி, CSK கேப்டன்

Read Entire Article