நானே அடுத்த போப்

அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என ஏற்கெனவே தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப்பாண்டவர் போல் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் எனவும் முதற்கட்டத் தகவல்

செல்போனால் வீபரிதம்:

டெல்லி: ஒரு நாளைக்கு 12 மணி நேரம் செல்போனில் கேம் விளையாடி வந்த 19 வயது சிறுவனுக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு. கூன் முதுகுடன், சிறுநீரை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இழந்து தவிப்பு!ஓராண்டாக இதை கண்டுகொள்ளாமல் விட்டதால், நாளுக்கு நாள் அவரின் உடல்நிலை மோசமாகி, ஒரு பருதி செயலிழந்ததாக (PARTIAL PARALYSIS) மருத்துவர்கள் எச்சரித்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

விற்பனையில் அசத்தும் HYUNDAI CRETA

இந்தியாவில் விற்பனையான பயணிகள் கார்களில் தொடர்ந்து 2வது மாதமாக அதிக எண்ணிக்கையிலான Creta மாடல் கார்களை விற்பனை செய்து Hyundai நிறுவனம் அசத்தல்.கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17,016 கார்களை விற்பனை செய்துள்ளது Hyundai. கடந்த 4 மாதங்களில் 70,000 கார்கள் விற்பனையாகியுள்ளன.

விடைப்பெறும் ஸ்கைப்:

21 ஆண்டுகளாக வீடியோ காலிங் சேவைகளை வழங்கி வந்த Skype தளத்தை மே 5ம் தேதி முதல் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட்நிறுவனம் அறிவிப்பு. மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்களின் சேவைகளை மாற்றியமைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம்.

நீட் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ளது; தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 23 லட்சம் பேர் நீட் நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர்2026-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5.20 வரை நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைப்பு.

கூட்ட நெரிசல்:

கோவா ஸ்ரீகாவ் பகுதியில் உள்ள லைராய் தேவி | கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு. 30க்கும் மேற்பட்டோர் காயம். இதில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடி, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஊர்க்காவல் படை முகாம்:

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது! முகாமில் ஆர்வமுடன் 43 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 53 பேர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம் மற்றும் எடை அளவீடு ஆகியன மேற்கொள்ளப்பட்டன! தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மாநகர காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பாஜக திடீர் ஆலோசனை:

சென்னை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக மையக் குழு ஆலோசனை சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறதுபாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன்உள்ளிட்டோர் பங்கேற்பு: அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து மையக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது

நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம்:

தமிழ்நாட்டில் நாளை (மே 4) முதல் தொடங்குகிறது| கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம். நாளை தொடங்கி மே 28ம் தேதி முடிவடையும் என வானிலை மையம் தகவல்!தற்போது வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், நாளை முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை. மக்கள் தங்களை காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்