தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசியல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் மருத்துவகல்லூரி தானமாக வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. மகளின் உடல்உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில் 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

கரூரில் 41 பேர் இறந்தபோது, அங்கே செல்லாமல் சென்னை போன விஜய் திரும்பி வரவே இல்லை. தலைவன் என்று நீங்கள் சொல்லும்போது மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் வழக்கு தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே மார்ச் 10ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே எழும்பூர் ரயில் நிலைய பணிகளால் அவதிப்படும் மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அடுத்த சில தினங்களில் வேட்பாளர்கள் பெயரை திமுக மற்றும் அதிமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடைபெறுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் இன்று நடைபெறும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியின் பக்கம் 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையப் பெற்றார். இரண்டாமிடத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளார்.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.