முதல் குரல் - சீறிய எடப்பாடி

“தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதே” தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கக்கூடாது என்பதை உள்துறை அமைச்சர் சந்திப்பில் தெரிவித்தேன் - எடப்பாடி பழனிசாமி

விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியாகும் முன்பே MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்ப சரிபார்ப்புக்கு கூடுதல் நேரம் & மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க முன்கூட்டியே விநியோகம் என தகவல்.

'திருமணம் மட்டுமே குடும்பத்தை உருவாக்காது'

“தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லையே தவிர, அவர்கள் குடும்பமாக இருக்க முடியும். திருமணம் என்பது மட்டுமே, குடும்பத்தை உருவாக்குவது அல்ல” 25 வயது பெண் அவர் விரும்பிய பெண்ணுடன் செல்ல அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வு கருத்து

மாற்றி அனுப்பப்பட்ட சடலம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சடலம் மாற்றி அனுப்பப்பட்ட விவகாரத்தில், பணியில் இருந்த மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நடவடிக்கை திருத்தணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை, வேறொருவரின் சடலத்திற்குப் பதிலாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டு, ராஜேந்திரனின் குடும்பத்தினர் போராட்டம் செய்யும் நிலை ஏற்பட்டது

ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு. ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைப்பு. பிப், ஏப்ரல், ஜூன் மாதங்களை சேர்த்து 1% குறைப்பு. இதன்மூலம் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.

நடிகரின் தந்தை விபத்தில் மரணம்

பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு. சைன் டாம் சாக்கோ உள்பட குடும்பத்தினர் நால்வர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதி.

5 வருடங்களுக்குப் பிறகு அம்பலமான உண்மை

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு, ஒரு புகாரின் மூலம் 2020ல் நடந்த ஆள்மாறாட்ட மோசடியை கண்டுபிடித்துள்ளது 2019ல் தேர்ச்சி அடைந்து தற்போது மருத்துவம் படித்துவரும் அஜித் கோராவின் புகைப்படம், 2020ல் தேர்ச்சி அடைந்து ஜோத்பூர் எய்ம்ஸ் கல்லூரியில் படிக்கும் அவரது உறவினர் சச்சின் கோராவின் ஹால்டிக்கெட்டில் இருப்பது தெரியவந்துள்ளது இரு ஹால்டிக்கெட்டிலும் அஜித் கோராவின் புகைப்படம் இருப்பது உறுதியான நிலையில், இருவரையும் பிடித்து போலீசார் விசரணை

சிறுவர்களை சித்ரவதை செய்த கொடூரம்

பீகாரில் சாக்லேட் திருடியதாக 5 சிறுவர்களை நிர்வாணமாக்கி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக போக வைத்த கடை உரிமையாளர் கைது. வீடியோ எடுத்தவர் மீதும் வழக்குப்பதிவு
மலாஹி என்ற கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தில், சுற்றி இருந்த பலரும் சிறுவர்களை கேலி செய்துள்ளனர். ஒருவரும் தடுக்கவில்லை.

ட்ரம்பை சாடும் மஸ்க்

“நான் உதவியிருக்காவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார். ட்ரம்ப் நன்றி கெட்டவர்” என தொழிலதிபர் எலான் மஸ்க் கடும் விமர்சனம். அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமல்படுத்தும் புதிய மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது

கைது நடவடிக்கை

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது. ஆர்.சி.பி அணியின் மார்க்கெட்டிங் பிரிவை நிர்வகிக்கும் நிகில் சோசேல், DNA மார்கெட்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் குமார், சுனில் மேத்யூ ஆகியோர் கைது.