தேடுதல் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் அடங்குவர். ததுணை வேந்தர்களை அரசே நியமிக்கும், நீக்கும் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது

மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் அமைக்க ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியீடு. 31 வட்டார மற்றும் வட்டாரம் அல்லாத மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட ரூ.108 கோடியும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.10.72 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

CBSE பள்ளிகளில், இனி மார்க் குறைந்தால் Fail!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் 'ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல்! கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டது.

காஷ்மீரில் தொடரும் பதற்றம்!

பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தற்போதும், தெற்கு காஷ்மீரில் தங்கியிருப்பதாக NIA அதிர்ச்சி தகவல்!

”வெறுப்பு வேண்டாம், அமைதியே வேண்டும்”

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறோம். கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டுக்கு சேவை ஆற்றுவேன்” - தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி வலியுறுத்தல்

நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள்:

PMLA சட்டப்பிரிவின் கீழ் பதியப்பட்ட 1,739 பண மோசடி வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல். பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதித்துறை அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே காரணமாக இருக்கலாம் என ED இயக்குநர் ராகுல் நவீன் தெரிவிப்பு

பாகிஸ்தான் மக்கள் தவிப்பு

அட்டாரி - வாகா எல்லையை சீல் வைத்து மூடியது பாகிஸ்தான். அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாக். மக்கள் தவிப்பு. கடந்த 6 நாட்களில், இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானில் இருந்து 1465 இந்தியர்களும் வாகா எல்லையைக் கடந்து தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஒரு சிலர் இன்னும் எல்லையில் சிக்கித் தவிப்பதாக தகவல்

பாம்பால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை

ஜப்பான்: டோக்கியோ, ஒசாகோ இடையிலான புல்லட் ரயில் பாதையின் மின் கம்பியில் சிறிய பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டதால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு. விடுமுறை நேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

உலகின் வயதான நபர் உயிரிழந்தார்

உலகின் வயதான நபராக திகழ்ந்த பிரேஸிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். 1908ம் ஆண்டில் பிறந்த இவர், தீவிர கால்பந்து ரசிகை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து மைதானம்போல் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவார் என குடும்பத்தினர் உருக்கம்.

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். ஆனால், பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க ஐதராபாத் அணி இன்று வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.