தமிழ்ப் புத்தாண்டு - கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமானோர் நீராடி, முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்டனர்

மாணவர் விடுதி திறப்பு விழா..

சைதாப்பேட்டையில் ரூ.44.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 10 தளங்களுடன் நவீன வசதிகள் அடங்கிய இந்த விடுதியில் 484 மாணவர்கள் தங்கலாம். அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி இந்த விதி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் அறிவிப்பு

தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை

குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040க்கு விற்பனை. ஒரு கிராம் விலை 15 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரு டெல்லியிலும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விஜய் உள்ளிட்டோர் சென்னையிலும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மெஹுல் சோக்சி கைது

PNB வங்கியில் ரூ. 14,000 கோடி மோசடி செய்து தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பெல்ஜியம்| நாட்டில் கைது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் நாடு கடத்தப்படுவார் என தகவல். 2018 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

புயல் வேகத்தில் மருத்துவமனையை அடைந்த ஓட்டுநர்

கேரளாவின் திரிச்சூர் அருகே, தனது நண்பனின் தம்பி மாடியில் இருந்து கீழே விழுந்த தகவல் அறிந்ததும், சட்டை கூட அணியாமல் ஆம்புலன்ஸை ஓட்டி விரைந்து வந்த அதன் ஓட்டுநர் அஜ்மலுக்கு குவியும் பாராட்டு. ஆம்புலன்ஸை கழுவிக் கொண்டு இருந்த போது, போன் வந்தது. சட்டை போடுவதற்கு 2வது மாடியில் உள்ள அறைக்கு செல்ல வேண்டும் என்பதால், அவசரத்தைக் கருதி அப்படியே புறப்பட்டேன்” என்கிறார் அஜ்மல். 9 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் செல்ல, கீழே விழுந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மரில் நள்ளிரவு 1.32 மணிக்கு மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு. ஏற்கனவே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வப்போது தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

மீண்டு வருமா சென்னை?

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று தனது ஏழாவது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களுக்கு இன்று சிஎஸ்கே அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கருண் நாயருக்கு குவியும் பாராட்டு

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். ஐபிஎல் தொடரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரை சதம் அடித்த கருண் நாயர். கடைசியாக 2018ல் பஞ்சாப் அணியில் இருந்தபோது CSKக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் அடித்திருந்தார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் அடித்தும், இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.