முதல்வர் மீது தாக்குதல்:

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது சரமாரித் தாக்குதல்.அவரது வீட்டில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குற்றத்தில் ஈடுபட்டவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்

முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

தென்காசியிலும் என்ஐஏ சோதனை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், பேட்டை பகுதியில் முகமது அலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்

உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு.தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குழந்தை மீட்பு

கேரளா: கோட்டயத்தில் 40 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தையைக் காப்பாற்ற குதித்த தந்தை. இருவரும் மேலே வர முடியாமல் தவித்த நிலையில் பத்திரமாக மீட்பு. சிரில் என்பவர் வீடு பார்ப்பதற்காகச் சென்றபோது விபரீதம் நடந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

கூகுள் நிறுவனத்திற்கு அபாராதம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.313 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.ஆஸி.யில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் விற்பனை செய்த போன்களில் கூகுள் Search Engine மட்டுமே இருக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிப்பு

ரூ.5.30 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 76,033 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ரூ.5.30 கோடியைக் காணிக்கையாகச் செலுத்தியதாகத் தேவஸ்தான நிர்வாகம் தகவல்

முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை:

சேலம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறதுஅணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 21,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
16 கண் மதகுகள் வழியாக 68,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அஷ்வின் கருத்து

ஷ்ரேயஸ் அப்படி என்ன தவறு செய்தார்? கொல்கத்தாவை கோப்பை வெல்ல வைத்தார். 2014ம் ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று கொடுத்தார்.சுப்மன் கில்லுக்காக மகிழ்ச்சி அடையும் அதே சமயத்தில் ஷ்ரேயஸ், ஜெயஸ்வாலுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்"ஆசியக் கோப்பை அணியில் ஷ்ரேயஸ் இல்லாதது குறித்து அஷ்வின் ஆதங்கம்

சுமுகமான பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து, மீண்டும் எல்லை வர்த்தகம் திறத்தல், BRICS மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு.