Top 10 News Headlines: டெல்லி சென்ற ஸ்டாலின், தமன்னாவிற்கு எதிர்ப்பு, ரூட் சாதனை - டாப் 10 செய்திகள்

6 months ago 5
ARTICLE AD

டெல்லி புறப்பட்ட முதலமைச்சர்

நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை வலியுறுத்த உள்ளார்.

குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும் விற்பனை.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு அபராதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின பைக் பேரணியில், ஹெல்மெட் இன்றி ஓட்டியதாக விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பெட்க்கு ரூ.1000 அபராதம் விதிப்பு
மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் உள்பட காங்கிரசார் 11 பேர் மீது பளுகல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

கிருஷ்ணகிரியில் டைடல் பார்க்

பட்ஜெட் அறிவிப்பின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க் - விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியீடு. 5 லட்சம் சதுர அடி பரப்பில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்ட வகையில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும்.

தமன்னாவிற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம். அவருக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.6.2 கோடி சம்பளம் நிர்ணயம். கன்னடத் திரையுலகில் திறமைக்குப் பஞ்சமா? உள்ளூர் நடிகைகளை நியமிக்காமல் இந்தி நடிகையை நியமிப்பது ஏன்? என கன்னட மக்கள் சிலர் எதிர்ப்பு. சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு என அம்மாநில அமைச்சர் எம்.பி.பாட்டில் விளக்கம்.

ட்ரம்ப் போட்ட அதிரடி உத்தரவு

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு. இது சட்ட விரோதம் என பல்கலை. நிர்வாகம் எதிர்ப்பு.
வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை. வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து

சீனாவில் ரோபோ குத்துச்சண்டை

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது. Motion - capture தொழில்நுட்பம் மூலம் இவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் ரோபோவுக்கு Iron First King என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

ரஷ்யா சென்றடைந்த கனிமொழி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விவரிக்க இந்தக் குழு பயணிக்கிறது. இதனைத் தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இக்குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ல்கனோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

சச்சின் சாதனையை முறியடிப்பாரா ரூட்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த 5வது வீரரானார் இங்கிலாந்தின் ஜோ ரூட். சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என பலரும் எதிர்பார்ப்பு. இந்த பட்டியலில் சச்சின் 15,921 ரன்கள்,  பாண்டிங் 13,378 ரன்கள், ஜாக் காலிஸ் 13,289 ரன்கள், ராகுல் டிராவிட் 13,288 ரன்களுடன் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

Read Entire Article