VBGRAMG-க்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேறுகிறது

அமமுகவில் இருந்து இன்று காலை நீக்கப்பட்ட மாணிக்கராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை. பொதுக்கூட்டம் தொடர்பான அதிமுகவினர் பேனர்களில் டிடிவி தினகரன் படம் புறக்கணிப்பு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360-க்கு விற்பனை.

குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் மோப்ப நாள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை. புதிய நபர்களின் விபரங்களை சேகரிக்கும் போலீசார்.

சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது பெங்களூரு.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான ‘வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி‘ கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.

அமெரிக்கா முன்மொழிந்த அமைதி வாரியத்தில் இணைய சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 19 நாடுகள் கையெழுத்து. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் தவிர்ப்பு.

உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறுகிறது.

98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரையில் 16 பிரிவுகளில் தேர்வாகி ‘Sinners' திரைப்படம் சாதனை. ஆஸ்கர் வரலாற்றில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ராய்ப்பூரில் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.