முதலமைச்சர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணம்

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம். இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், நாளை ஜெர்மனி சென்றடைகிறார். லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தினை முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளார்.

ஸ்டாலின் பெருமிதம்

“திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 32,81,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன”
-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். 82 மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு. தேர்தலுக்குத் தயாராவது, பூத் கமிட்டிகள் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தகவல்.

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.88.19ஆக சரிவு. இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவை இந்த சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

3 லட்சம் பேருக்கு நோட்டீஸ்

குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக பீகாரின் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ். அவர்கள் வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. SIR ஆய்வின்போது அவர்கள் ஆவணங்களில் முரண்பாடு இருந்தது கண்டறியப்பட்டது.

குரங்கின் சேட்டையால் வந்த சோதனை

உ.பி: பத்திரப்பதிவுக்காக பைக்கில் வைத்திருந்த பணப் பையை உணவு பொட்டலம் என நினைத்து சமயம் பார்த்து சுருட்டிய குரங்கு. உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகளை மழைப் போல் கீழே வீசியதால் அதை எடுக்க குவிந்த மக்களிடையே தள்ளுமுள்ளு. ரூ.80,000 கொண்டு சென்ற நிலையில், உரிமையாளருக்கு மீதம் ரூ.52.000 மட்டுமே கிடைத்துள்ளது.

புல்லட் ரயிலில் பிரதமர் மோடி

ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. ரயில் இன்ஜின் ஓட்டும் பைலட்டுக்கான பயிற்சி பெற்றுவரும் இந்தியர்களையும் சந்தித்தார்.

இந்தியா வரும் புதின்

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வர இருப்பதை உறுதிப்படுத்தியது கிரம்ளின் மாளிகை.
சீனாவில் திங்களன்று நடக்கும் உச்சி மாநாட்டில் புதினும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் அறிவிப்பு.

ட்ரம்பை சாடிய நீதிமன்றம்

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு. தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து. வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்

துலீப் கோப்பையில் சாதனை

துலீப் கோப்பை: காலிறுதி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வடக்கு மண்டல பவுலர் அக்யூப் நபி அசத்தல். கிழக்கு மண்டலத்திற்கு எதிரான இந்த போட்டியில் 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவுடன் சேர்ந்து துலீப் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அக்யூப் பெற்றுள்ளார்.