Top 10 News Headlines: செஸ் விளையாட தடை, எகிறிய சென்செக்ஸ், ஷாக் கொடுத்த ஸ்டார்க் - டாப் 10 செய்திகள்

7 months ago 5
ARTICLE AD

உதகையில் ஸ்டாலின்

உதகை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதகையில் மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள முதலமைச்சர், பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்க உள்ளார்.

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை பிளக்க, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தங்கம் விலை சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் மீதான விலை 165 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீனவர்கள் வேதனை

குமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமப் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடற்கரையோரம் வலைகள் உலர வைக்கும் செட்டில் நள்ளிரவுக்கு மேல் திடீரென தீ பிடித்து விபத்து. இதில் பலருடைய மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து கருகின. அப்பகுதி மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை

சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது

சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் கைது. பாஸ்கரன் (70) மற்றும் வித்யா (65) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை ஒரு வாரமாக நோட்டமிட்ட சந்தோஷ், சுத்தியலால் அடித்து இருவரையும் கொலை செய்துள்ளான். இருவரும் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தோஷை CCTV காட்சிகளை வைத்து சூரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இன்று பேச்சுவார்த்தை

இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் நடைபெற உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 575 புள்ளிகள் உயர்ந்து 24,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம். பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி.

சாலை விபத்தில் 10 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாடத் தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் செஸ் விளையாடுவதற்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது தாலிபான் அரசு. இஸ்லாமிய ஷரியாவின் கீழ் செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வடிவம் என விளக்கம் அளித்துள்ளார் அந்நாட்டு விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி

”நான் வரலை” - ஷாக் கொடுத்த ஸ்டார்க்

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், வெளிநாடு வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் WTC இறுதிப் போட்டிக்கு தயாராக இருப்பதால், இந்தியாவுக்கு திரும்பமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article