Top 10 News Headlines: சூர்யவன்சிக்கு பிரதமர் பாராட்டு.. 100% வரி போட்ட டிரம்ப்- டாப் 10 செய்திகள்

7 months ago 9
ARTICLE AD

100% வரி- டிரம்ப் அறிவிப்பு:

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!"அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள், அவர்கள் திரைப்பட ஸ்டூடியோக்களை பயன்படுத்திக் கொள்ள எங்கள் தயாரிப்பாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இது ஹாலிவுட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" Truth Social தளத்தில் ட்ரம்ப் பதிவு!

20 கோடி வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னை வடபழனியில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவர் வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்பிலான நகை வாங்க வருவது போல் நடித்து கொள்ளையடித்துள்ளனர். வைரம் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது.

மருத்துவர் உயிரிழப்பு:

பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த |மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சுத்திணறி உயிரிழப்பு. அஜ்சாள் சைன் (26), ஃபாத்தில் (27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று மலையேறிய நிலையில், இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யவன்சிக்கு பிரதமர் பாராட்டு:

பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்த இளம் வயதிலும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனையின் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது"பீகாரில் கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி - ஐதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி-ஐதராபாத் மோதல்.

சிஎஸ்கே ஒரு சாம்ராஜ்யம் - சாக்ஷி தோனி

சிஎஸ்கே ஒரு கிரிக்கெட் அணி என்பதையும் தாண்டி, அது ஒரு குடும்பம், சாம்ராஜ்யம், உணர்வு; வெற்றியோ, தோல்வியோ மஞ்சள் படைக்கு ஆதரவாக கம்பீரமாக நிற்போம்; கர்ஜித்துக் கொண்டே இருங்கள் - சாக்ஷி தோனி.

ஃபெயிலான மகன் - கேக் வெட்டி கொண்டாட்டம்:

கர்நாடகா : 10ம் வகுப்பில் அனைத்து பாடத்திலும் ஃபெயில் ஆன மகன்; கேக் வெட்டிக் கொண்டாடிய பெற்றோர்'மகன் தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை; அவன் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெறலாம்' என பெற்றோர் தெரிவித்துள்ளனர்

தீ விபத்து:

செகந்திராபாத் பட்னி நகரில் எஸ்பிஐ நிர்வாக அவலகத்தின் 4வது தளத்தில் தீ விபத்து; ஆவணங்கள் கணினிகள், உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம்; நீண்ட நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

திருச்சூர் பூரம் திருவிழா

கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற வாண வேடிக்கை.பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

Read Entire Article