எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,960க்கு விற்பனை. கிராம் விலை 45 ரூபாய் உயர்ர்ந்து 8 ஆயிரத்து 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாதனை தமிழர்!

தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியின், நடைபோட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலம் வென்றார். 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ இலக்கை கடந்து அசத்தல்.

நடப்பாண்டில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்திய பள்ளிக் கல்வித்துறை. பள்ளியை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும், மின்சாதனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடமேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு. இது மேலும் வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

அமெரிக்கா செல்கிறார் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார் மே 29 வரை அமெரிக்காவில் இருக்கும் விக்ரம் மிஸ்ரி அந்நாட்டு உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கிறார். கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதன் மிஸ்ரி தொடர்ச்சியாக மிஸ்ரி பயணம் மேற்கொள்கிறார்

”மாஸ்க் கட்டாயம் இல்லை”

தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் - மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

சிக்கிய பல் மருத்துவர்

உத்தரபிரதேசத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சையால் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி, சரண். சிறையில் அடைப்பு!
உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

சிறுவனுக்காக குவிந்த கூட்டம்

துருக்கி: தனது 6 வயது மகன் புற்றுநோயில் இருந்து மீண்டதைக் கொண்டாட வருமாறு சமூகவலைதளத்தில் பதிவிட்ட தந்தையின் அழைப்பை ஏற்று 1000-க்கும் மேற்பட்டோர் கையில் பலூனுடன் ஒன்று கூடிய ஆச்சர்யம். ‘எங்களுக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. எனது மகனுக்காக நீங்கள் பலூனை பறக்கவிடுவீர்களா? என்ற தந்தையின் வார்த்தைக்காக பலரும் ஒன்று திரண்டு, பலூனை பறக்கவிட்டு, சிறுவனை வாழ்த்தினர். இந்நிகழ்வில் புற்றுநோய் பாதித்த பலரும் பங்கேற்றனர்

மணப்பெண் தேடி அண்டை நாட்டை நாடும் சீன மாப்பிள்ளைகள்

சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில், வங்கதேசத்தில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய முன்வரும் சீன மணமகன்கள். தரகர்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால் 'வங்கதேசத்தில் உள்ள சீன இளைஞர்கள் யாரும் வெளிநாட்டு பெண்களை மணக்க வேண்டாம்' என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் இன்றைய போட்டி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் லக்னோவை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. லக்னோ ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இன்றைய போட்டியில் வென்றால் தான் முதல் தகுச்சுற்று போட்டியில் களமிறங்க முடியும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.