தொழிலாளர் தினம்

நாடு முழுவதும் இன்று தொழிலாளர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை மே தினப்பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொழிலாளர் தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரே அடியாக சரிந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் 205 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிப்பு!

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவர் பூராசாமி (44) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி (36) என்பவர் உயிரிழப்பதற்கு முன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல் விமர்சனம்

"11 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஞானோதயம் வந்து மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை கொண்டுவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்போது அறிவிப்பு என்பது தெரியாது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, காங்கிரசின் முன்னெடுப்பை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது. அதனை வரவேற்கிறோம்” - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ஏடிஎம் கட்டணம் உயர்வு

ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று (மே. 1) முதல் ரூ.23 வசூல். ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, வேறொரு வங்கியின் ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ .17-ல் இருந்து ரூ.19 ஆக உயர்வு; 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில் அது தற்போது ரூ.23ஆக உயர்வு

பைக் டாக்ஸிக்கு உத்தரவு

கர்நாடகாவில் Rapido, Uber, Ola நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை வரும் ஜூன் 15ம் தேதிவரை இயக்க அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி. மே14ம் தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15ம் தேதிவரை அனுமதி நீட்டிப்பு

இஸ்ரேலில் பயங்கர காட்டுத் தீ

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரை ஒட்டிய வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி வேகமாக பரவி வருகிறது. 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காமல் வேகமாக பரவும் தீயை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் உதவவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றையை லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், மும்பை அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

”சிஎஸ்கேவின் எதிர்கால சொத்து”

"மிடில் ஆர்டரில் சிறந்த பங்களிப்பை தருகிறார். நல்ல ஃபீல்டர், அவரிடம் அதிக பவர் இருக்கிறது, ஃபீல்டிங்கில் எனர்ஜியோடு இருக்கிறார். இதுபோன்ற வீரர்கள்தான் CSK-க்கு தேவை. வரும் காலங்களில் டெவால்ட் ப்ரிவிஸ் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்" - நேற்றைய போட்டிக்குப் பின் CSK கேப்டன் எம்.எஸ்.தோனி