Top 10 News Headlines: சமாதனம் பேச விரும்பும் அமெரிக்கா, பாலிவுட்டில் போட்டி, கோலி குட்பாய்? டாப் 10 செய்திகள்

7 months ago 5
ARTICLE AD

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

அடுத்தடுத்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து 72 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 9 ஆயிரத்து 45 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் எச்சரிக்கை:

“இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்" 'பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் என்ற இடத்தில் இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டதும் உடனடியாக சுட்டு வீழ்த்திவிட்டோம்' என இந்திய ராணுவம் X தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் - அரசு அதிகாரி உயிரிழப்பு

காஷ்மீர்: ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு. ஒரு பொறுப்புமிக்க அரசு அதிகாரியை இழந்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இரங்கல்

பாலிவுட்டில் தலைப்புக்கு போட்டி

Operation Sindoor எனும் தலைப்பிற்காக இந்தி திரையுலகைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திரைத்துறை சங்கங்களில் விண்ணப்பம். தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் முதலில் பதிவு செய்து முன்னணியில் உள்ளார். T series மற்றும் Zee Studios நிறுவனங்கள் மூன்று மற்றும் நான்காம் இடங்களிலுள்ளன. மிஷன் சிந்தூர், ஹிந்துஸ்தான் கா சிந்தூர், மிஷன் ஆபரேஷன் சிந்தூர், சிந்தூர் கா பத்காலா போன்ற பெயர்களிலும் விண்ணப்பம்

அறுவை சிகிச்சையால் விபரீதம்:

கேரளா: திருவனந்தபுரத்தில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் கை மற்றும் கால்களில் 9 விரல்களை இழந்து தவிக்கும் 31 வயதான பெண் மென்பொறியாளர். கடந்த பிப்ரவரியில் வயிற்றில் இருந்த கொழுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. சில நாட்களில் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனை சென்றபோது விரல்களை துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாக்.-க்கு கடன் வழங்க முடிவு!

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி அளிக்க இந்தியா கடும் எதிர்ப்பு. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது இந்தியா. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு.

களமிறங்கிய அமெரிக்கா:

போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை* கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை. மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் - பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ பேச்சு

விளம்பரங்களை அறிமுகம் செய்யும் Threads

இன்ஸ்டாகிராம் Threads-ல் அவ்வப்போது விளம்பர வீடியோக்களை பகிரும் முயற்சியில் களமிறங்கியுள்ளது மெட்டா நிறுவனம். பயனர்களின் Feed-களுக்கு இடையே குறிப்பிட்ட இடைவெளியில், Sponsored எனக் குறிப்பிடப்பட்ட விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில், Threads பரிந்துரைக்கப்படுவதால் இதன் பயனர்களும் 35% அதிகரித்துள்ள நிலையில், விளம்பர யுக்தியை மெட்டா கையில் எடுத்துள்ளது.

கோலி ஓய்வுபெற விருப்பம்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விருப்பம். ஓய்வு பெறும் முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிசிஐ அறிவுறுத்தல்

பாகிஸ்தானின் PSL கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு

PSL கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். UAE-க்கு மாற்றப்படும் என நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று ஒத்திவைத்துள்ளது. நிலைமை மோசமாக உள்ளது, இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு வருகின்றன, ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

Read Entire Article