திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோரின் தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர்களை சந்தித்ததாகவும், விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 சரிந்து ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில்அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

உலகம் முழுவதிலும் யூடியூப் Homepage, YouTube Music, YouTube Kids முடங்கிய நிலையில், அதனை சரி செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த பிரச்னை இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 22ம் தேதி கோவை கருமத்தம்பட்டியில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் முதல் 3 Al வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரமடைந்து 100வது ஆண்டை எட்டும்போது, AI துறையில் உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலைய 10,11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு 5,6வது நடைமேடைகளில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று(பிப்ரவரி18) தொடங்கியது. தவக்காலத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது; திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சாம்பல் பூசிக் கொண்டனர்.

காங்கிரஸ் கூட்டணி, அதிகார பங்கு ஆகியவை குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.