Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!

1 month ago 3
ARTICLE AD

கரூர் தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் - டெலியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4  மணிக்கு அறிவிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வரவில்லை. அதனால் அவர் தனித்து விடப்பட்டுள்ளார். விஜயையும் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியையும் ஒப்பிட வேண்டாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த நாவலூரில் வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக கூறிய நிலையில் நடவடிக்கை இல்லை. அதிமுக ஆட்சியில் சுமார் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.  வர உள்ள தேர்தல் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 2 சிபிஎம் எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் குறைந்த நேரமே கிடைக்கிறது. அதிக எம்எல்ஏக்கள் இருந்தால்தான் மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேச முடியும். 10 எம்எல்ஏக்களாவது இருந்தால்தான் சட்டமன்றத்தில் பேச கூடுதல் நேரம் கிடைக்கும் என  சிபிஎம் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் 100 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு விலங்குகள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக மேற்கு ஆசிய பகுதிகளுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு ஆசியாவில் உள்ள சூழலுக்கு ஏற்ப விமான சேவைகளை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

2026 ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிஎஸ்கே ரசிகர்களுக்காக OG's Are Back கொண்டாட்ட நிகழ்வு மார்ச் 22ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை சென்னை அணியின் அதிகாரப்பூர்வ செயலி  இணையதளத்தில் இன்று தொடங்குகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிச்சயம் செய்து விட்டு திருமணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article