நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 2047ம் ஆண்டு வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற, அனைத்து மாநிலங்களுடனும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. அதேநேரம், இந்த கூட்டத்தை மம்தா பானர்ஜி மற்றும் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

"கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. 2 அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 5தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு.800-கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது" தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்.

மீண்டும் எகிறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.71,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை 50 ரூபாய் உயர்ந்து ரூ.8990 ஆக நிர்ணயம் செய்யபப்டுகிறது.

ஆபாச வீடியோ - நடிகை புகார்

மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பி வருவதாக சைபர் கிரைம் காவல்துறையில் நடிகை கிரண் புகார். தனது போலி ஆபாச வீடியோவை ஷேர் மற்றும் டவுன்லோடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை. இதுபோன்று மார்பிங் வீடியோ ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை.

கொள்ளையன் சுட்டுப் பிடிப்பு

சேலம் ஓமலூரில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில், கொள்ளையன் நரேஷ்குமாரை சுட்டுப் பிடித்தனர் போலீஸார். சங்ககிரி மலையடிவாரத்தில் நரேஷை பிடிக்க முயன்றபோது போலீஸாரை தாக்கியதால் சுட்டுப் பிடித்துள்ளனர். கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வக்குமாருக்கு காயம்.

தென்மேற்கு பருவமழை

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்

ராஜஸ்தான்: பி பாசிடிவ் ரத்தவகை கொண்ட சைனா (23) என்ற கர்ப்பிணிக்கு ஏ பாசிடிவ் வகை ரத்தத்தை ஏற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியும் அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சோகம். கர்ப்பிணிக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்ததால் ரத்தம் ஏற்றியுள்ளனர். மருத்துவமனையில் அலட்சியத்தால் இந்த பெரும் இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சைனாவின் உறவினர்கள் வேதனை

போன் காலால் நின்று போன திருமணம்

கர்நாடகா: மணமேடை வரை சென்ற மணமகள் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறியதால் மணமகன் அதிர்ச்சி. முகூர்த்த நேரத்திற்கு முன்பு மணமகளின் காதலன் பேசிய நிலையில், தனக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பதாக மணமகனிடம் கூறியுள்ளார். பின் போலீசார் இருவீட்டாரிடையே பேச்சு வார்த்தை நடத்தியபோதும் மணமகளும் மணமகனும் ஒப்புக் கொள்ளாததால் திருமண செலவுக்கான தொகையை மணமகன் குடும்பத்திற்கு திருப்பி அளிக்குமாறும், காதலித்தவருக்கே பெண்ணை மணமுடிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ட்ரம்பிற்கு கொட்டு வைத்த நீதிமன்றம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அனுமதியை, ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து பல்கலைக்கழகத்தால் தொடரப்பட்ட வழக்கில், அரசின் முடிவை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும்.