2-வது நாளாக திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது. விருப்ப மனு அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 750 பேரிடம் நேர்காணல் நடைபெறுகிறது

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு உடன்பாடு கையெழுத்தானது. 5 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக அறிவிப்பு.

தேர்தல் நெருங்கும் நிலையில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் வரும் 23-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் தவெக தலைமை திணறி வருவதாகத் தகவல்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்பனை.

ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவினர் பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

மேற்காசியா போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகளில் இருந்து 2.44 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். போரில் 5 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மாயம் என வெளியுறவுத்துறை தகவல்.

பெங்களூருவில், உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைகளுக்கு முன்னதாக உயர்ந்து வரும் பேருந்துக் கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதியவரை 'கொரியர்' அனுப்ப முயன்ற குடும்பம்.. ரீல்ஸ்க்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இதை செய்ததாக மன்னிப்பு கேட்டனர்..!

கார்க் தீவை மீண்டும் தாக்கினால், எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடம் சாம்பலாக்கப்படும் என்று அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மேற்காசியா தொடர்பாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகளை வெளியிட்டது இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்.