Top 10 News Headlines: ”ஒரு கை பார்ப்போம்” சிஎம் ஸ்டாலின், தொண்டர்களுக்கு விஜய் கட்டளை- டாப் 10 செய்திகள்

7 months ago 9
ARTICLE AD

ஒரு கை பார்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்

"234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை. எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்!" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தவெக தொண்டர்களுக்கு விஜய் கட்டளை

"நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்” - கோவை பயணத்தின் போது அணிவகுப்பு வாகனத்தின் மீது ஏறிய தொண்டர்களின் செயல்பாடுகள் வேதனை அளிப்பதாக விஜய் அறிக்கை

அதிகரிக்கும் உறுப்பு தானம்:

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 80 பேர் உறுப்புதானம் செய்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல். இதில் 23 இதயங்கள், 24 நுரையீரல்கள், 140 சிறுநீரகங்கள், 69 கல்லீரல்கள், 3 கணையங்கள், 9 சிறுகுடல்கள், 1 கை, 2 வயிறு, 8 இதயவால்வு, 15 தோல், 36 எலும்புகள், 124 கருவிழிகள் என 454 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீடு - அரசாணை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு. அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை

புதிய தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு. 52வது தலைமை நீதிபதியாக மே 14ம் தேதி பதவியேற்கிறார். கே.ஜி பாலகிருஷ்ணனுக்குப் பிறகு பட்டியலின சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் 2வது நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம் தருவதாக பிரதமர் மோடி பேச்சு. முப்படை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார்

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

"இந்தியா எவர் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை. நாம் எப்போதும் பதிலடியே கொடுத்துள்ளோம். இன்றும் அணு ஆயுதங்களை நாம் பயன்படுத்த மாட்டோம். பாகிஸ்தான் அவற்றை பயன்படுத்த விரும்பினால், எங்களிடமும் அந்த ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அது நடக்கக் கூடாது என விரும்புகிறேன்" பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான கேள்விக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பதில்

Tesla Cybertruck-ஐ வாங்கிய குஜராத் தொழிலதிபர்

இந்தியாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே, குஜராத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் லாவ்ஜி தாலியா என்பவர் TESLA CYBERTRUCK. இதன் அடிப்படை விலை ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இறக்குமதி மற்றும் சேவை வரிகளுடன் சேர்த்தால், இந்தியாவில் இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது

கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த முதியவர், அவரது 10 வயது பேத்தி மற்றும் 3 வயது பேரன் ஆகியோரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஐபிஎல் இன்றைய போட்டி

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ள CSK vs PBKS போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மந்தம். சில இருக்கைகள் இன்னமும் விற்பனை ஆகவில்லை. CSK அணியின் தொடர் தோல்வியால் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என இணையத்தில் பலரும் கருத்து

Read Entire Article