எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்

“வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இபிஎஸ் இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம்” - அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் திட்டவட்டம்

”2 வாய்ப்புகள் கிடைத்தன” - செங்கோட்டையன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைந்தன. அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஓபன் டாக். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா - செங்கோட்டையன்

OXFORD பல்கலை.யில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

“பெரியார் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை, பகுத்தறிவு. அதனால்தான் 'நானே சொன்னாலும் உன் புத்திக்கு சரியென்று பட்டதை ஏற்றுக்கோ, இல்லனா விட்டுவிடு' எனச் சொன்னார். எல்லாத்தையும் கேள்வி கேட்கணும், விடையை கண்டுபிடிக்கணும், எதையும் லாஜிக்கா அணுகணும் என்ற அறிவியல் சிந்தனையைத்தான் பரப்பினார்” - ஸ்டாலின்

“OPS, TTV விலகல் தற்காலிகம்தான்”

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் விலகியிருப்பது தற்காலிகம்தான்; அதிகாரப்பூர்வமாக மீண்டும் அவர்கள் இணைவார்கள். திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

இட்லி, தோசைக்கு 5% ஜிஎஸ்டி

வடநாட்டில் அதிகம் சாப்பிடப்படும் சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிந்தியாவில் பிரபலமான உணவுகளான இட்லி மற்றும் தோசை மீதான ஜிஎஸ்டி 5%-ஆகவே தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு தரப்பினரும் இணையத்தில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்நிய நேரடி முதலீடுகள் 15% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (FDI) 15% அதிகரித்து $18.62 பில்லியனாக உயர்வு. அமெரிக்காவில் இருந்தே அதிகப்படியான FDI இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன. சுமார் $5.61 பில்லியனாக வரவு அதிகரிப்பு. இது கடந்த காலாண்டை காட்டிலும் 3 மடங்கு அதிகம். அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்களில் முதல் 3 இடங்களில் கர்நாடகா ($5.69 B), மகாராஷ்டிரா ($5.36B), தமிழ்நாடு ($2.67 B) இடம்பிடிப்பு.

போர்துறை என பெயர் மாற்றம்

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையை, 'போர் துறை' எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. முதலாம் உலகப் போர் முதல் அனைத்துப் போர்களையும் அமெரிக்கா வென்றுள்ளதால் இனி போர் துறை என்றழைக்கப்படும் என ட்ரம்ப் பேச்சு.

இந்தியாவிற்கு முக்கிய பங்கு

"போரை நிறுத்துவதிலும், உலக அமைதிக்கான முயற்சிகளிலும் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா-உக்ரைன் இடையேயான உறவுகள் வலுவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா பேச்சு

உலக சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 85 ரன்களை விளாசி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பிசிசிஐயின் தலைவராகும் சச்சின்?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இதுகுறித்து சச்சினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது