Top 10 News Headlines: எகிறிய தங்கம், திரைப்பட விருதுகள், ஐதராபாத்தை அடக்குமா மும்பை? - டாப் 10 செய்திகள்

8 months ago 8
ARTICLE AD

இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணி அளவில் கூடுகிறது| தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம். புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

கூட்டணி ஆட்சி கிடையாது - அதிமுக

2026இல் இபிஎஸ் தனியாகத்தான் ஆட்சி நடத்துவார்; கூட்டணி ஆட்சி கிடையாது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? -அதிமுக எம்.பி. தம்பிதுரை

ஆப்படித்த தங்கம் விலை

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்த நிலையில், ஆபரண தங்கம் 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறத். ஒரு கிராம் ஆபரண தங்கம் 8 ஆயிரத்து 920ரூபாய்க்கு விறபனையாகிறது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். காலையில் வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், நாகை மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிர்ச்சி. கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.

திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு

விழுப்புரம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் வழிபாடு. கடந்த 2023ம் ஆண்டு வழிபாடு செய்வதில் இரு தரப்பு மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயில் மூடப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் பாதுகாப்புடன் கோயில் இன்று திறக்கப்பட்டது.

ராகுல் காந்தி நம்பிக்கை

”குஜராத்தில்தான் காங்கிரஸ் கட்சி தனது பயணத்தை தொடங்கியது. இங்குள்ள தொண்டர்கள் நீண்ட காலமாக சோர்வுடன் உள்ளனர், அதை மாற்றவே இங்கு வந்துள்ளேன். RSS மற்றும் பாஜகவை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வீழ்த்த முடியும், அதை உறுதியாக செய்து முடிப்போம்"- ராகுல்காந்தி

கேரள மாநில திரைப்பட விருதுகள்

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் சிறந்த நடிகருக்கான விருது பிரித்விராஜ் (ஆடு ஜீவிதம்), சிறந்த நடிகைக்கான விருது ஊர்வசி (உள்ளொழுக்கு), பீனா ஆர் சந்திரன் (தடவு) பெற்றுக் கொண்டனர்.

கர்நாடகாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கர்நாடகாவில் இன்று சிறப்பு அமைச்சரவை கூட்டம். கர்நாடகாவில் சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏப்.11இல் தாக்கல். அறிக்கை தொடர்பான விரிவான விவாதத்திற்காக சிறப்பு அமைச்சரவை இன்று கூடுகிறது

ஐபிஎல் - இன்றைய போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை தலா இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்று, புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

அர்செனல் அணியிடம் மீண்டும் படுதோல்வி அடைந்த ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதியில் அர்செனல் அணியிடம் 1-2 (Aggregate: 1-5) என்ற கோல் கணக்கில், சொந்த மைதானத்திலேயே படுதோல்வி அடைந்தது ரியல் மாட்ரிட். இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து வெளியேறுகிறது. மேலும், ரியல் மாட்ரிட் அணியிடம் இதுவரை தோல்வியே சந்திக்காத அணி என்ற சாதனையோடு திகழ்கிறது அர்செனல்.

Read Entire Article