ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னம் வரை பேரணி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் பேரணியில் பங்கேற்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

உதவி எண் அறிவித்த தமிழ்நாடு அரசு

”கல்வி பயில காஷ்மீருக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் . தமிழ்நாடு அரசு உதவி தேவைப்படும் மாணவர்கள் கவனத்திற்கு : தொடர்பு/வாட்ஸ்அப்: 75503 31902, டோல்-ஃப்ரீ எண்: 80690 09901” - தமிழ்நாடு அரசு

ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.72,120க்கு விற்பனை.ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணிகளுக்காக கடந்த ஆண்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலை இன்று முதல் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி! மெட்ரோ பணிகள் முடிவடைந்த காரணத்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் (7.30 am - 11.00am மற்றும் 5.00pm - 8.30pm) மட்டும் ஒரு வழி பாதையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

பாகிஸ்தான் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அவசர ஆலோசனை. கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

சேதத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு ஒப்புதல். நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் வழங்க வேண்டும் என உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை. பதற்றத்தை குறைக்க நட்பு நாடுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை

”நாங்கள் தலையிடமாட்டோம்” - அமெரிக்கா

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம். இரு நாடுகளுக்கிடையே இது பிராந்திர போராகவோ, அணுஆயுத போராகவோ மாற வேண்டாம் என எதிர்பார்க்கிறோம். அதிகபட்சமாக போர் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்க முடியும்" -அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் திட்டவட்டம்

புதிய போப் தேர்வு

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட். அமெரிக்காவில் இருந்து தேர்வான முதல் போப்பான இவர் 'போப் பதினான்காம் லியோ' என அழைக்கப்படுவார். சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வானதை அடுத்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.

ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து இன்று முடிவு?

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் |நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மாறுகிறது. தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். IPL தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவினை எடுக்க உள்ளோம். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம் - பிசிசிஐ

ஐபிஎல் இன்றைய போட்டி:

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏக்னா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.